பக்கம் எண் :

மூலமும் உரையும்49



     (வி-ம்.) அண்டம்-உலகங்கள். அளித்த-பாதுகாத்த. கன்னி-என்றும் இளமை நீங்காத உமையம்மையார். முனிவு-சினம். நுதல்-நெற்றி. தெறு நோக்கு-சுடும் கண். ஆயிரம் என்றது எண்ணிறந்த என்றபடி. வான்-சிறந்த. சயம்-வெற்றி. வீரனை-வீரபத்திரனை. தந்து-படைத்தருளி.

5 - 10: உள்ளத்து..................................சாரன்

     (இ-ள்) உள்ளத்து அருளும் தெய்வமும் விடுத்த-தன் நெஞ்சத்தே அருளுடைமையும் தெய்வம் உண்டு என்னும் எண்ணத்தையும் துவரநீக்கிய; அடுள்மனத் தக்கன்-அறியாமையையுடைய மனத்தையுடைய தக்கன் என்பான் செருக்கினால் தொடங்கிய; பெருமகம் உண்ணப்புக்க தேவினர்தம்-பெரிய வேல்வியின்கண் அவியுண்ணப் புகுந்த நான்முகன் இந்திரன் முதலிய தேவர்களுடைய; பொருகடல் படையினை-போர் செய்தற்குக் காரணமான கடல்போன்ற பெரியபடைகளை; ஆரியவூமன் கனவு என ஆக்கிய-ஆரிய வூமன்கண்ட கனவைப் போன்று வெளிப்படாமற் செய்த; கூடல் பெருமான்-மதுரையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுடைய; பொதியப் பொருப்பு அகத்து-பொதியமலையின்கண் அமைந்த; அருவி அம்சாரல்-அருவிகளையுடைய அழகிய சாரலின்கண் என்க.

     (வி-ம்.) அருள்-எல்லாவுயிர்களிடத்தும் பரந்துபட்டுச் செல்லும் பேரன்பு. தெய்வம் உண்டு என்னும் நினைவு என்க. இருள்-அறியாமை. மகம்-வேள்வி. உண்ண-அவியுண்ண என்க. தேவினர்-நான்முகன் முதலியோர். பொருகடற்படை: வினைத்தொகை. ஆரியவூமன்-ஆரியனாகிய வூமங் ஊமன் கனவென அரியவாக்கிய எனக் கூறிக் குறுக்கல்விகாரம் என்பாரும் உளர். ஊமன்கண்ட கனவு வெளிப்படாததுபோலத் தேவர்படையும் வெளிப்படாதாயற் றென்பது கருத்து. சாரல்-மலைப்பக்கம்.

10 - 15: இருவி.......................................துணிந்தனம்

     (இ-ள்) இருவி-அம்புனத்திலும்-தினை அரிந்து இருவியாக விடப்பட்ட தாளையுடைய அழகிய இத் தினைப்புனத்தின் கண்ணும்; மயிலுங் கிளியுங் குருவியும் படிந்து-மயிலும் கிளியும் குருவியும் தமக்கு உணவில்லாதிருந்தும் பயின்று பழகிய இடமாதலின் இவ்விடத்தினின்றும் போகாவாய் வீழ்ந்து கிடத்தலால்; நன்றி செய்குநர்ப் பிழைத்தோர்க்கு-த்மக்கு நன்மை செய்தவர் திறத்திலே தவறு செய்தவர்க்கு அப்பாவத்தினின்றும் னீங்குவதற்கு; உய்வுஇல-வழியில்லை; என்னும் குன்றாவாய்மை-என்று கூறப்படும் குறையாத உண்மையை; நிலைநின்று காட்டித் தங்குவன கண்டும்-தாம் ஈண்டே தங்கி நிலைத்தலால் எமக்கு அறிவித்துத் தங்குகின்ற அப்பறவைகளைக் கண்டு வைத்தும்; மனவலிகூடி-மனவலிமை பெற்று; ஏகவுந்துணிந்தனம்-இப் கல்-4