பக்கம் எண் :

50கல்லாடம்[செய்யுள்4]



புனங்காவலை விட்டு எம்மில்லத்திற்குச் செல்லத்துணிந்துளோம் என்க.

     (வி-ம்.) இருவி-கதிரை அரிந்துகொண்டு வறிதேவிடப்பட்ட தாள். புனத்தினும் என்புழி உம்மை, இழிவு சிறப்பு.என்னை? தமக்கு இரை வழங்கவியலாத இவ்வறும்புனத்திலும் என்பதுபட நிற்றலால் என்க. மயில் முதலிய பறவைகள் பண்டு தமக்குத் தினைப்புனம் இரை வழங்கியனன்றியை நினைந்து அது தன் கதிரையிழந்து நல்கூர்ந்த விடத்தே அதனைப்பிரிந்து போதல் நன்றி மறத்தல் என்னுந் திவினையாம் என்று அஞ்சி அவ்வறும்புனத்தைப் பிரியாது தங்குகின்றன. அவற்றின் ஒழுக்கத்தால் யாங்கள் நன்றி செய்குநர்ப் பிழைத்தோர்க்குய்வில் என்னும் வாய்மையை உணைர்ந்திருந்தும் யாங்கள் எமக்கு எம்பெருமான் செய்த நன்றியைப் பொருட்படுத்தாது பிரிந்து போகின்றோம் என்பது கருத்து. யாங்கள் இயல்பாகப் பிரிகின்றோமில்லை, நேர்ந்த செவ்வி அங்ஙனம் எம்மைப் படிறு செய்விக்கின்றது என்று இரங்குவாள் வலிமனங்கூடி ஏகவுந்துணிந்தன என்றாள். ஏகவும் என்புழி உம்மை இழிவு சிறப்பு. ஏகவுந் துணிந்தனம் என்றது பிரிவருமை கூறியபடியாம்.

17 - 21 ஊற்றெழுக............................................புகுத

     (இ-ள்) பெருமதம் ஊற்று எழும் இருகவுள்-மிக்க மதநீர் இடையறாது ஊற்றெழாநின்ற இரண்டு கவுள்களையுடைய; கொலைமலை-கொலைத்தொழிலை யுடைய மலைபோன்ற யானையின்; கும்பம் மூழ்கி-மத்தகத்திலமிழ்ந்து; உடல் குளித்துஓட-உடலின் கண் உருவியோடும்படி; பிறை மதியன்ன கொடுமரம் வாங்கி-பிறைத்திங்கள் போன்ற வில்லை வளைத்து; தொகையர் கண் எனச் சுடுசரம்-துரக்கும்-மயில்போன்ற மகளிரையுடைய கண்ணை ஒத்த சுடுகின்ற கணையை ஏவுகின்ற; எம்முடைக் குன்றவர் தன்மனம் புகுத-எம்முடைய குன்றக் குறவருடைய நெஞ்சிலே புகுதும்படி;

     (வி-ம்.) மதம் ஊற்றெழு கவுள் என்க. கொலைமலை-யானை: அன்மொழித்தொகை. தஞ் சுற்றத்தாரின் ஆற்றல் கூறுவாள், அவரெய்யும் கணை யானையின் மத்தகத்தை துளைத்து உடலினும் ஊடுறுவும் என்றாள். அவர்தாமே ஆராந்தறியவல்லுநர் அல்லர் என்பாள், மனம்புகுத என்றாள்.

21 - 26: இப்புனக்குடி.....................................பொன்னணிதற்கே

     (இ-ள்) இப்புனக்குடி கணியர்-இத்தினைப்புனத்தின்கட் பழங்குடியாகிய இவ்வேங்கையராகிய காலக்கணிவர்; தம் மலர்க்கை ஏடு அவிழ்த்து-தம் கையதாகிய மலராகிய குறிப்பேட்டினை அவிழ்த்துப் பார்த்து; நிழலும் கொடுத்து-அவர் தம்பாற் சோதிடங் கேட்டதற்கு நீழலுமளித்து; வரிப் புற அணில்வால் கருந்தினை வளைகுரல் கொய்யும் காலமும்-வரிகளையுடைய