முதுகினையுடைய அணிலின்
வால் போன்ற கரிய தினையின் முதிர்ந்து வளைந்த கதிரினைக் கொய்தற்கு காலமும்;
நாள் பெறக் குறித்து-நன்னாளாகக் குறிப்பிட்டு மேலும்; அவர் ஈன்ற மழலை மகார்க்கும்
பொன் அணிதற்கு-அக்குன்றவர் ஈன்ற மழலை மொழியினையுடைய மக்கட்கும் பொன் அணிந்து
விடுதலாலேயே என்க.
(வி-ம்.)
கணியர்-வேங்கையர். செறலால், அஃறிணை உயர்திணையாயிற்று. இப்புனத்தின் பூங்குடியாகிய
கணியர் என்க. வேங்கை குறிஞ்சிக் கருப்பொருளாதல்பற்றி இங்ஙனம் கூறினாள். கணியர்-காலக்கணிதர்.
வேங்கைமலர்தல் கண்டு குன்றவர் தினை கொய்தற்குரிய காலம் இஃதென்றறிதலாலே வேங்கை
சோதிடங் கூறிற்று எனத் தற்குறிப்பேற்றிக் கூறுகின்றாள். வேங்கை சோதிடங் கூறிற்று
என்பதற்கேற்பக் கை யேடவிழ்ந்து....குறித்து எனச் சிலேடைவகையாற் கூறிய நயம் உணர்க.
மலராகிய கையேடு என்க. மலரின்கண் ஒழுங்குற்ற இதழுமாம். ஆள்-நன்னாள். கதிர் கொய்யத்
தொடங்குங்கால் நன்னாள் கொண்டு தொடங்கல் மரபாகலின் காலமும் நாள் பெறக் குறித்து
எனப்பட்டது.
அவர்-அக்குறவர்.
பொன்னணிதல்-பின்போன்ற தன் மலரைச் சூடுவித்தல். பொன்னணிதல் என்னும் சடங்கையும்
செய்து என ஒரு பொருள் தோன்றுதல் உணர்க. மழலை மகார் என்றமையால் உரையாசிரியர்.
பொன்னணிதல்-கலியாணம் என்றது பொருந்தாமை யுணர்க. பொன்னணிதற்கு; உருபு மயக்கம்.
பொன்னணிதல் என்க.
இனி,
உழையினங்காள்! யாம் செய்த படிறு கேண்மின்! மயில் முதலியன தங்குதல் கண்டும் ஏகவுந்துணிந்தனம்.
எற்றிற்கு அங்ஙனம் துணிந்தீர்? எனின் எம் குன்றவர் மனம் புகும்படி வேங்கை மலர்க்கையேடவிழ்த்துத்
தினைக்குரல் கொய்யுங் காலமும் குறித்து அவர் தம் மக்கட்குப் பொன்னணிந்தமையான்
என்றவாறு.
வேங்கை மலர்ந்தமையால்
எந்தமர் தினை கொய்யலாவார் யாம் காவலொழிந்து இல்லிற் கேகின்றோம் என்றுணர்த்தியபடியாம்.
இதன்கண் உழையினங்கேண்மின்!
என்றது மானொடு கூறி வரைவுகடாவியது. கணியர் குரல் கொயுங் காலங்குறித்துப் பொன்னணிந்தமையால்
என்றது, தினைமுதிர் வுரைத்து வரைவு கடாவியது. மயிலும்...........தங்குவன கண்டும் வலிமனங்கூடி
ஏகவுந் துணிந்தனம் என்றது பிரிவருமை கூறி வரைவு கடாவியது என்க. இவ்வாற்றான் மேலே
காட்டிய திருக்கோவையார்த்துறை மூன்றும் இதன்க ணடங்கினமை ய்ணர்க. மெய்ப்பாடும்
பயனும் அவை.
|