22: மறி.................................நோக்கினனே
(இ-ள்)
மறிக்குலத்து - மான் கூட்டத்தினுள் வைத்து ; உழையின் விழி நோக்கினளே-மருண்டு நோக்குகின்ற
பெண்மான் விழிகளைப்போன்ற விழிகளை யுடையோய் என்க.
(வி-ம்.)
மறி - மான், உழை - பெண்மான், உழையின் விழி போன்ற நோக்கினையுடையோய் என்க.
1-5:
புன்....................................வேல்
(இ-ள்)
புள் பெயர் குன்றமும் - குருகு என்னும் பறவையினது பெயரையுடைய மலையும்; எழுவகைப் பொருப்பும்
- எழு வகைப்பட்ட வேறு மலைகளும்; கடல்மேல் கவிழ்முகம் பொரி உடல் மாவும் - கடலின்மேல்
கவிழ்ந்த தலையினையும் பொருக்குடைய உடலைமுடைய மாமர வடிவமான சூரபதுமனும்; நெடுங்கடல்
பரப்பும் - கொல்லுந் தொழிலையுடைய அரக்கரும்; என் உனத்து இருளும் - என் நெஞ்சத்தின்கண்
உள்ள மலமாகிய இருளும்; இடை புகுந்து உடைத்த மந்திரத் திருவேல் - ஆகிய இவற்றினிடையே
புகுந்து அழித்தொழித்த மறைமொழியினையுடைய அழகிய வேற்படையினையும் என்க.
(வி-ம்.)
புள் : குருகு (கிரவுஞ்சம்) கவிழ்முகம் - கவிழ்ந்த தலை, கடல்மேல் என மாறுக. பொரி
- பொருக்கு, அடுந்தொழில் - கொல்லுந்தொழில், இருளும் ஆகிய இவற்றின் புகுந்து என்க.
மந்திரவேல் - மந்திர சக்தியினையுடைய வேல்.
5-10:
மதம்...............................போல
(இ-ள்)
மதம் கெழு மயிலோன் - வலிமை பொருந்திய மயிலூர் தியையுமுடைய முருகக்கடவுள்; குஞ்சரக்
கொடியொடும் வள்ளி அம் கொழுந்தொடும்-தெய்வயானை நாய்ச்சியாரோடும் இளைய வள்ளி
நாய்ச்சியாரோடும்; குறித்துக் கூறாக்கற்பம் நிலை செய்த-வரையறுத்துக் கூறப்படா ஊழிதோறும்
நிலைபெற்றிருந்த; புண்ணியம் குமிழ்த்த குன்று உடை கூடல் - அறமே திறண்டு வடிவங் கொண்டாற்போன்ற
திருப்பரங்குன்றமென்னும் மலையை ஒருபாலுடைய மதுரை நகரத்தின்கண்; நிறைந்து உறை கறைமிடற்று
அறம்கெழு பெருமான்- நிறைந்து எழுந்தருளியிருக்கின்ற நஞ்சு பொருந்திய மிடற்றினையுடைய
அறவாழி அந்தணனாகிய சிவபெருமான் ; பேர் அருள் அளித்த மாதவர் போல - தனது பெரிய
திருவருளை வழங்கப்பெற்ற பெரிய தவத்தினையுடைய மெய்யடியார் போல என்க.
(வி-ம்.)
மதம் - வலிமை, மயிலோன் - மயிலூர்தியையுடைய முருகக்கடவுள், குஞ்சரக்கொடி-தெய்வயானை
நாய்ச்சியார், வள்ளியங்
|