பக்கம் எண் :

512கல்லாடம்[செய்யுள்70]



உள் எழு கலக்கத்துடன்-நெஞ்சத்திலே தோன்றா நின்ற கலக்கத்தோடே; மயங்கினம் ஆல்-யாம் இங்ஙனம் மயங்கினோம் ஆதலால் ; குறித்த இடைநிலை - யாம் துன்பமாக நினைந்த இப்பொழுது உயிருடன் நிலைத்திருத்தல் ஒன்றுமே ஆற்றுதற்கரிதாய் இருந்தது என்க.

     (வி-ம்.) நனவு - விழிப்பு நிலையின்கண் நிகழும் நிகழ்ச்சி, உள் - நெஞ்சம். இடைநிலை - உயிருடன் நிலைத்திருக்கும் இந்நிலை. ஆற்றுதற்கரிதாய் இருந்தது என்பது குறிப்பெச்சம்.

     இதனை, நோக்கினளே ! மயிலோன் குன்றுடைக் கூடற்பெருமானளித்த மாதவர் போல, முன்னொருநா ளிவ்வுள்ளங் கரிவைத்து உரைசெய்த வூரர் தம்மொழி திரிந்து தவறு நின்றுளவேல், அவர் குறையன்றால், காலக்குறிகொல், அன்றியும் நம் பெருமதி யழகுகொல், உள்ளெழு கலக்கத்துடன் மயங்கினமால், இவ்விடைநிலை யொன்றே ஆற்றுதற்கரிதாய் இருந்து என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.