இனி,
இசெய்யுளில் வெள்ளாங்குருகு புலால் நாறும் கயல் மீனைத் தின்று தன் வாயினைத் தூயமலரில்
துடைத்து அதன் தூய்மையைக் கெடுத்தாற்போல நீ இழிந்த பரத்தையரைத் தோய்ந்து என்னையும்
தோய வருதலின் என் துய்மையும் கெடுத்தொழிவை என உள்ளுறை காண்க.
இதனை
ஊரனே! அரக்கன் ஒருபதுவாயானு மரற்றவும் இருபது கைகளும் நெரியவும் பெருவிரனகநுதியால்
மலையறுத்த மதிமுடி யந்தணன் கூடல் ஆவண்வீதி யனையவர், அறிவுறின், நின்மார்பகந் தோய்ந்த
என்னிணை முலை நன்னரிழந்தனபோல, மற்றவர் மனநல மிழந்து மாழ்கிச் செற்றம் பகர்வராதலால்
இக்கால் தீண்டலையென வினை முடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
|