பக்கம் எண் :

மூலமும் உரையும்561



1-5: உலர்........................கழித்து

     (இ-ள்) உலர்கவட்டு ஓமைப் பொரி சினை-உலர்ந்த கொம்பினையுடைய ஓமை என்னும் மரத்தினது பொரிந்த கிளையிலுள்ள; கூகையும்-கோட்டானும்; வீசு கோட்டு ஆந்தையும்-அம்மரத்தினது நெடிய கிளையிலுள்ள ஆண்டலைப்புள்ளும்; சேவலொடு அலமர-தத்தஞ் சேவற்பறைவைகளோடு பறந்து சுழலாநிற்ப; திரை விழிப் பருந்து இனம்-திரைந்த விழியினையுடைய பருந்துகள்; வளை உகிர்ப் படையால் பார்ப்பு இரைகவர-வளைந்த நகமாகிய படைக்கலன்களால் அவற்றின் குஞ்சுகளாகிய இரையைக் கவர்ந்திடும்படி; பயன் உறு உலகில்-பயன் தருகின்ற பாலைநிலத்தின்கண்; கடன் அறும் யாக்கை கவர்கடன் கழித்து-வந்த வினைப்போக மற்றமையால் உயிர் கழிந்த உடலின் பொருட்டுச் செய்யக்கடவ கடன்களைச் செய்து முடித்து, என்க.

     (வி-ம்.) உலர்கவடு: வினைத்தொகை. ஓமை-ஒரு பாலை நிலத்துமரம். பொரிசினை-வினைத்தொகை. கூகையும் கோட்டானும் பாலைக்கருப் பொருளாகிய பறவைகள். கூகைகோட்டான் என்னும் பறவைகளின் பார்ப்புக்களைப் பருந்து இரையாகக் கவரும் என்க. திரைவிழி-தோல்திரைந்த விழி. உகிர்-நகம். இவ்வகைப் பயன் அன்றிப் பிற பயன் தராத பாலை என்பது கருத்து. பாலை நன்காடுடைமையின் கடன் அறும் யாக்கை கவர் கடன் கழித்து என்றார். கடன்-வினை நுகர்ச்சி.

6-10: தழல்......................செல்வி

     (இ-ள்) தழல் உணவுக் கொடுக்க-தீயுண்ணும்படி வழங்காநிற்ப; அதன் உணவு இடை-அந்நெருப்பு உண்ணும் உணவின் நடுவே; கை விளக்கு எடுத்து கரை இனம் கரைய-கையில் விளக்கு ஏந்திப் பசியால் அழுகின்ற தம்மக்கள் அழா நிற்பவே; பிணம் பிரித்து உண்ணும் குணங்கு இனம் கொடுப்ப- அப்பிணத்தை மூடு பிரித்துண்ணும் இயல்புடைய பேய்கள் பிணத்தின் தசையினை வழங்குதலாலே; சூல்பேய் ஏற்ப-அவற்றில் சூல் கொண்ட பேய்கள் அவற்றைக் கையில் ஏற்றுக்கொள்ள; இடாகினி கரப்ப-இடாகினிப் பேய்கள் அத்தசையினைப் பறித்து, மறைத்துக் கொள்ளலை; கண்டு உளம் தளிர்க்கும்- கண்டு நெஞ்சங்களிக்கும்; கருணைஅம் செல்வி-அருளுடைய அழகிய காடுகிழாளாகிய செல்வியும் என்க.

     (வி-ம்.) உணவிடை-உண்ணும் பொழுதில். கரையினம்-அழும் மக்கள். விளக்கு-ஈண்டுக் கொள்ளி. குணங்கு-பேய். சூல் பேய் ஏற்ப இடாகினிப்பேய் அதனைப் பறித்துக் கரப்ப வென்க. இடாகினி-ஒருவகைப் பேய். இக்காட்சியைக் கண்டு செல்வி களிப்பாள் என்பது கருத்து; செல்வி-செல்வியும்.