பக்கம் எண் :

மூலமும் உரையும்567



  திருப் பெறு மயலவர் காண
வரப் பெறு மாதவம் பெரிதுடை யேமே.

(உரை)
கைகோள்: கற்பு. வாயிலோர் கூற்று.

துறை: வாயிலோர் வாழ்த்தல்.

     (இ-ம்) இதற்கு “வாயில் உசாவே தம்முளு முரிய” (தொல். செய்யுளி, 200) எனவரும் நூற்பாவின்கண் தம்முளும் என்புழி வந்த உம்மையை எச்சவும்மையாக்கித் தலைவன், தலைவி கேட்பவும் உரிய எனக்கொண்டு அதனாலமைத்திடுக.

     இனி, “பரத்தை வாயிலென விரு கூற்றும் கிழத்தியைச் சுட்டாக் கிளப்புப்பய மிலவே” என்பவாலோ எனின் இதுதானும் தலைவனை நோக்கிக் கூறினும் தலைவி கேட்டு மகிழவும் ஊடாதிருக்கவும் கருதிய கூற்றாகவே கொள்க.

1-6: நிலைநீர்............................கேள்வியர்

     (இ-ள்) நிலைநீர் மொக்குளின்-இயக்கமின்றி நிலைத்துக் கிடக்கும் நீரின்கண் தோன்றுங் குமிழியைப் போன்று; விளைவாய்த் தோன்றி- பழவினையின் பயனாகத் தோன்றி; வான் தவழ் உடல் கறைமதி எனச் சுருங்கி-வானத்தே இயங்குகின்ற உடலின்கண் களங்கமுள்ள நிறைத்திங்கள் போன்று ஒருகாலைக் கொருகாற் றேய்ந்து; புல்லர் வாய்ச் சூள் எனப் பொருளுடன் அழியும்-கீழ்மக்கள் கூறிய சூள் மொழி போன்று பொருளோடே அழிந்தொழியா நின்ற; சிறு உணவு இன்பம் திருந்தா வாழ்க்கை-சின்னஞ்சிறிய நுகர்ச்சிகளாகிய இன்பத்தையே பற்றுக்கோடாகக் கொண்ட திருத்தமில்லாத இவ்வுலகவாழ்க்கையை; கான்றிடு சொன்றியின் கண்டு அருவருத்து-உண்டு கக்கிய சோற்றைக் கண்டு வெறுக்குமாறு போலே அறிந்து வெறுத்து; புலன் அறத்துடைத்த-தன்மனம் ஐம்புலன்களிலும் செல்லாதபடி பாதுகாத்தற்குக் காரணமான; நலன் உறு கேள்வியர்-நன்மைமிக்க ஞான நூற்கேள்வியையுடையவரும் என்க.

     (வி-ம்.) நிலைநீர்-இயக்கமற்ற நீர். மொக்குள்-குமிழி. இது யாக்கையின் நிலையாமைக்குவமை. பழவினையின் விளைவாய்த் தோன்றி என ஒருசொற் பெய்துரைக்க. “வினையின் வந்தது வினைக்கு விளைவாயது” எனப் பிற சான்றோரும் ஓதுதல் காண்க. நிறைத்திங்களிலே களங்கம் முழுதும் தோன்றுதலின் ஈண்டு உடற்கறை மதி என்று நிறைமதியைச் சுட்டினார். கறை-களங்கம். புல்லர்-கீழ்மக்கள். அவர் கூறும் சூண்மொழி பொருளின்றி அழிதலின், யாக்கையின் அழிவிற்குவமை எடுத்தார். உணவு-ஈண்டு நுகர்ச்சி என்னும் பொருட்டாய் நின்றது. அந்நுகர்ச்சியின்பம் விரைந்து அழிதலின்