சீறுணவின்பம் எனப்பட்டது.
திருந்துதல்-மெய்யுணர்வு பெறுதல். கான்றிடு சொன்றி-உண்டு கக்கியசோறு. கண்டு-இயல்பினை
ஆராய்ந்துணர்ந்து. புலன்- சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்பன. அவற்றை அறத் துடைத்தலாவது,
அவற்றின்கண் மனஞ் செல்லாதபடி தடுத்து நிறுத்துதல். நலன்-வீட்டின்பம். நூல்-ஞானநூல்.
7-10:
ஆரா...............................மிடற்றோன்
(இ-ள்)
ஆரா இன்பம் பேரமுது அருந்தி-தெவிட்டாத பேரின்பமாகிய பெரிய அமிழ்தத்தை உண்டு;
துரவு எனும் திருவுடன் உறவுசெய் வாழ்க்கையர்- துறவறமென்னும் நங்கையோடே கேண்மை கொண்டு
வாழாநின்ற மெய்வாழ்க்கையை யுடையவருமான சான்றோருடைய; வாயினும் கண்ணினும் மனத்தினும்-வாயால்
வாழ்த்தும் வாழ்த்தினும் கண்ணாற் காணும் காட்சியினும் நெஞ்சால் நினையும் நினைப்பினும்;
அகலாப் பேரொளி நாயகன்-நீங்காத பேரொளிப் பிழம்பாகிய கடவுளும்; கார் ஒளி மிடற்றோன்-கரிய
ஒளிதிகழும் மிடற்றினையுடையோனும்; என்க.
(வி-ம்.)
ஆரா இன்பம்-எத்துணை நுகர்ந்துந் தெவிட்டாத இன்பம். துறவு என்னும் விழுச் செல்வத்தோடு
எனினுமாம். வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை, யாண்டும் அஃதொப்ப
தில் எனவரும் அருமைத் திருக்குறளையும் நினைக. மெய்யறிவுடையோர் காணுங் காட்சியெல்லாம்
கடவுட் காட்சியே யாகலின் கண்ணினும் என்றார். கண்; ஆகுபெயர். காரொளி என்றது நஞ்சினை.
11-16:
மண்...............................பெருமான்
(இ-ள்)
மண் திருவோட்டுப் பஞ்சவன் பொருத கிள்ளியும்-மண்ணாகிய செல்வத்தை விரும்பிப் பாண்டியனோடு
போர் செய்த சோழனும்; கிளையும்- அவன் சுற்றமும்; கிளர்படை நான்கும்-மனவெழுச்சியையுடைய
அவனுடைய நால்வகைப் படைகளும்; திண்மையும் செருக்கும் தேற்றமும்-அவனுடைய வலிமையும்
இறுமாப்பும் யானே வெல்வேன் என்னும் தெளிவும்; பொன்றிட- அழிந்தொழியும்படி; எரி
வாய் உரகர் இருள் நாட்டு ஒருவ-எரிகின்ற நஞ்சினையுடைய வாயையுடைய நாகருடைய இருண்ட
நாட்டின்கண் வீழும்படி; கொலை கொண்டு-கொலைத் தொழிலை மேற்கொண்டு; ஆழி குறியுடன்
படைத்து மறிய-ஆழமாகிய மடுவின்கண் முற்பட்டு வீழ்ந்த பாண்டியனுடன் குறிக்கொண்டு தானும்
வீழ்ந்தபோது; புதைத்த மறங்கெழு பெருமான்-அதில் புதைந்தொழியும்படி செய்தருளிய வேட்டுருவாய்
வந்த பெருமானும் என்க.
(வி-ம்.)
மண்திரு-மண்ணாகிய செல்வம். மண்ணாசையினால் ஒரு வேந்தன் மற்றொரு வேந்தன்மேல்
போருக்கெழுதல் வஞ்சித்திணை என்று கூறுப. இதனை,
|