வஞ்சிதானே
முல்லையது புறனே (தொல். சூத்-1007.)
எஞ்சா
மண்நசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத்
தலைச்சென்று அடல்குறித் தன்றே (தொல். சூ. 1008)
எனவரும் நூற்பாக்களானும்
உணர்க. பஞ்சவன்-பாண்டியன். இவனைச் சுந்தரேச பாதசேகர பாண்டியன் என்று திருவிளையாடற்
புராணம் கூறும். கிள்ளி-சோழன். கிளை-அவன் சுற்றத்தார். யானை குதிரை தேர் காலாள்
என்னும் படை நான்கும் என்க. செருக்கு-இறுமாப்பு. தேற்றம்-தெளிவு. பொன்றுதல்-இறத்தல்.
உரகர்-நாகர். உரகர் இருள்நாடு; என்றது நாகலோகத்தை. ஆழி-ஆழ்ந்த மடு. மறம்கெழு
பெருமான் என்பது பெற்றாம். இந்த வரலாற்றினைத் திருவிளையாடற் புராணத்தில், 37
சோழனை மடுவில் வீட்டிய படலத்தின்கண் விரிவாகக் காண.
17-22:
நீர்.....................ஊர
(இ-ள்)
நீர்மா கொன்ற சேயோன் குன்றமும்-கடலின் கண்ணதாகிய சூரபதுமனாகிய மாமரத்தைத் தடிந்த
முருகப் பெருமான் எழுதருளியுள்ள திருப்பரங்குன்றமும்; கல்வியும் திருவும் காலமும் கொடியும்
மாடமும் ஓங்கிய-கல்வியும் செல்வமும் வாழ்நாளும் கொடியும் மாடங்களும் உயர்ந்துள்ள;
மணிநகர்க் கூடல்-நகரங்களுள் மாணிக்கமெனச் சிறந்த நான்மாடக்கூடல் என்னும்; ஆலவாயினுள்-திருவாலவாயின்கண்;
அருளுடன் நிறைந்த-திருவருட்பிழம்பாகிய அங்கையற்கண்ணியோடு எழுந்தருளியுள்ள; பவளச்
சடையோன்-பவளம்போன்று சிவந்த சடையினையுடைய சிவபெருமானுடைய; பதம் தலைசுமந்த நல்
இயல் ஊர-திருவடிகளைத் தலைமேற்கொண்ட நல்ல அழகையுடைய எம்பெருமானே! என்க.
(வி-ம்.)
நீர்-ஈண்டுக் கடல். மா-சூரபதுமனாகிய மாமரம். சேயோன்-முருகப்பெருமாங் சேயோன்
மேய மைவரை உலகமும் (தொல். சூ. 951) எனத் தொல்காப்பியரும் ஓதுதல் காண்க.
பாண்டியர்கள் சங்கம் வைத்துச் செந்தமிழ் வளர்த்தலின் கல்வி ஓங்கிய நகரமாயிற்று.
திரு-செல்வம். காலம்-வாழ்நாள். அம்மையின் உருவம் திருவருட் பிழம்பேயாகலின் அருளுடன்
நிறைந்த சடையோன் என்றார். நல்லியல்-நல்ல அழகு.
22-27:
நின்........................ஆக
(இ-ள்)
நின் புல்லம் உள்மங்கையர்-நின்னுடைய புல்லிய நெஞ்சத்தையுடைய பரத்தை மகளிரது; ஓவிய
இல்லம்-ஓவியம் எழுதப்பட்ட இல்லம்; எம் உறையுள் ஆக-அவ்வாறு ஓவிய மெழுதப்படாத எம்முடைய
இல்லமாகவும்; கேளாச் சிறு சொல் கிளக்கும் கலதியர்-சான்றோரால் கேட்கப்படாத
இழி
|