சொற்களைப் பேசுகின்ற
கலகமியற்றும் அப்பரத்தையின் தோழிமார்கள்; இவ்வுழி ஆயத்தினர்களும் ஆக-இவ்வில்லத்தின்
கண்ணுள்ள என் தோழிமார்களாகவும்; மௌவல் இதழ் விரிந்து மணம் சூழ்பந்தர் செய்
முன்றிலும்-அப்பரத்தை மகளிருடைய மல்லிகை மலர் மலர்ந்து மணம்பரவுகின்ற பந்தர் அமைந்த
முற்றத்தானும்; எம்முடை முன்றில் ஆக-அத்தகைய சிறப்பொன்றுமில்லாத எங்களுடைய முற்றமாகவும்
என்க.
(வி-ம்.)
புல்லம்-புன்மை. உள்-நெஞ்சம். பரத்தைமகளிர் காமுகரின் கைப்பொருள் ஒன்றே கருதிப்
பொய்யன்பு செய்பவர் என அவரை இகழ்வாள் நின்புல்லம் உள்மங்கையர்
என்றாள். ஓவியர் எழுதிய சிறப்பொன்றுமேயின்றி அறம் சிறிதும் நிகழாத வெற்றில்லம்
என இகழ்வாள் ஓவிய இல்லம் என விதந்தாள். கேளாச் சிறு சொல்-சான்றோர் கேட்கத்தகாத
இழிசொல். இழிசொற்பேசும் அத்தோழிகளின் மொழியை நீ எவ்வாறுதான் பொறுத்துக்
கொள்கின்றனையோ என இகழ்வாள் கேளாச்சிறு சொற்கலதியர் என்றாள்.
மௌவல்-மல்லிகை. முல்லை எனினுமாம். எம்முடை முன்றில் என்றது அத்தகைய சிறப்பொன்றுமில்லாத
முற்றம் என்பதுபட நின்றது.
28-34:
மலர்......................உடையேமே
(இ-ள்)
மலர் சுமை சேக்கை-மலர்களைப் பெருஞ்சுமையாகப் பரப்பப்பட்ட அப்பரத்தை மகளிருடைய
கட்டில்; மது மலர் மறுத்த திருமணம் கொள்ளா இ சேக்கையதாக-அவ்வாறு தேன் துளிக்கும்
மலர் பரப்பப்படாமையால் நின்னுடைய அழகிய நெஞ்சம் விருப்பங் கொள்ளமாட்டாத இந்த
எளிய கட்டிலாகவும்; நின் உளங் கண்டு-நின்னுடைய நெஞ்சத்தைக் குறிப்பாலுணர்ந்து; நிகழ்
உணவு உன்னி-தனக்குக் கிடைக்கின்ற உணவு ஒன்றையே கருதி; நாணா-நாணாமல்; நவம் பொய்
பேணி-புதுமையான பொய்களை விரும்பி; உள் புணர்ச்சி-தன் நெஞ்சினுள்ளே பொருத்திக்கொண்டு;
முகமன் யாழொடு பாணனும் நீயும்-நினக்கு முகமன் கூறுதலோடே நின் நெஞ்சத்தைக் கவரும்
யாழையுமுடைய நின்னுடைய பாண் மகனும் நீயும்; திருப்பெரும் அயலவர் காண-செல்வவளம் பெற்றுள்ள
அயலோர் காணும்படி; வரப்பெறும் மாதவம் பெரிது உடையேம்-இங்கு வருதற்குக் காரணமான
பெரிய தவத்தை யாங்கள் மிகவும் உடையேம்; ஆதலால் நின்வரவினைப் பெற்றேம், நீ
நீடூழி வாழ்க! என்க.
(வி-ம்.)
காமுகரை வயப்படுத்துதற்கு கட்டிலின்கண் மிகையாக மலர் பரப்புவர் என்பாள். மலர்ச்சுமைச்
சேக்கை என்றாள். சேக்கை-படுக்கைக் கட்டில். தலைவியின் கட்டில் அத்தகைய சிறப்பொன்றும்
இல்லாதது என்பாள் மதுமலர் மறுத்த சேக்கை என்றாள். திருமனம் என்றது இகழ்ச்சி. இச்சேக்கை
என்றது எளிய இக்கட்டில் என்பதுபட நின்றது. நின் பரத்தமைக்கு ஏதுவாக நினக்கு ஒரு பாணனும்
அமைந்தான். அவன்றானும் தான் உண்ணும் உனவின்
|