பக்கம் எண் :

மூலமும் உரையும்571



பொருட்டே நின் குறிப்பறிந்து முகமன் கூறிப் பரத்தையர் இல்லிற்கு நின்னை அழைத்துச் செல்வான். மேலும் யாழிசையாலும் நின் நெஞ்சு கவர்வான் என இகழ்வாள் நின்னுளங் கண்டு நிகழ் உணவு உன்னிப் பொய்பேணி முகமன் கூறுதலும் யாழும் உடைய பானன் என்றாள். அயலவர்-அயல் வீட்டினர். நீ வருதற்குக் காரணம் நின்னுடைய அன்பென்று நினைத்தற்கிடனில்லை. ஒரோவழி அதற்குக் காரணம் யாங்கள் செய்த தவமே போலும் என்பாள் வரம்பெறும் மாதவம் உடையேம் என்றாள். நீ நீடுவாழ்க! என்பது குறிப்பெச்சம்.

     இதனை, ஆலவாயினில் அருளுடனிறைந்த பவளச்சடையோன் பதந்தலை சுமந்த நல்லிய லூரனே! பாணனு நீயும் அயலார் காண, எமதுறையுளாகவும் இவ்வுழித் தோழியராகவும் எம்முன்றிலாகவும் மலர்மறுத்த சேக்கையாகவும் நின்னுள்ளத்தி லெண்ணி இங்கே வரப்பெறு மாதவமுடையேம் என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.