பக்கம் எண் :

576கல்லாடம்[செய்யுள்81]



மையும் இளங்கா உடைமையும் தாமரை மலர்கள் மிக்கிருத்தலும் பெருமதி தாங்கியிருத்தலும் அமுதம் இருத்தலும் இளமை முதலியன வாடாவிருத்தலும் தேவர் மணந்திருத்தலும் என்க. இவற்றுள் இளங்கா இந்திரனுக்குக் கற்பகச் சோலையும் குன்றத்திற்கு மரச்சோலையும் என்க. தாமரை மிகுதற்கு இந்திரனுக்குக் கூறுங்கால் உவமையாகு பெயராகக் கொண்டு தாமரை மலர் போன்ற கண்கள் மிகுதலானும் என்றும், குன்றத்திற்குக் கொள்ளுங்கால் முதலாகுபெயராகக் கொண்டு தாமரை மலர் மிகுதலானும் என்றும் கொள்க. இனி நெடுவிசும்பு அணவும் பெருமதி தாங்கி என்பதற்கு இந்திரனுக்குக் கொள்ளுங்கால் நெடிய வானுலகத்தை ஆளுதற்குரிய அரசனாதற்குரிய பேரறிவினைத் தாங்கி என்றும், குன்றத்திற்குக் கொள்ளுங்கால் வானத்தை அளாவியுள்ள திங்களைத் தாங்கி என்றும் சிலேடை வகையாற் பொருள் கொள்க. நூறு குதிரை வேள்வி செய்து முடித்துத் தேவேந்திரனாதல் வேண்டும் ஆகலின் நூறுடை மகத்திற் பேறு கொண்டிருந்த புரந்தரன் என்றார்.

16-22: கோயில்.....................பிணிக்க

     (இ-ள்) கோயில் கொண்டிருந்த குணப்பெருங் குன்றம்-திருக்கோயில் கொண்டருளிய பெரிய குணமாலை; அருந்தவக் கண்ணினோடு-செயற்கரிய தவமாகிய கண்ணோடே; அடைந்த மாமுனிபால்-காட்டிலிருந்த பெரிய காசிப முனிவனிடத்து; பேரிருள் மாயை பெண்-மிக்க இருளையொத்த மாயை என்னும் பெண்ணானவள்; மகவு இரக்க-பிள்ளை வேண்டுமென்று வேண்டிக்கொள்ள; உவர் முதல் கிடந்த சுவை ஏழமைத்து-உவர்ப்பு முதலாக உள்ள எழுவகைச் சுவையும் அமைத்து; கொடுத்த மெய்ப்பிண்டம்-வழங்கிய அவ்வுண்மைப் பிண்டத்தின்; குறியுடன் தோன்றிய எழுநிறச் சகரர்கள்- அடையாளங்களுடனே பிறந்த ஏழு நிறத்தினையுடைய சகரர்களும்; ஏழ் அணி நின்று-ஏழு வரிசையாக நின்று; மண்புக மூழ்கிய வான்பரி பிணிக்க-பாதலத்தில் ஒளிக்கப்பட்ட சிறப்புள்ள வேள்விக்குதிரையைக் கண்டு பிடித்துக் கட்டும் பொருட்டு என்க.

     (வி-ம்.) குணப்பெருங் குன்றம் என்றது நிலைபேருடைமை, அசையாமை முதலியவையுடைமை பற்றி என்க. “குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்த லரிது” (29) என்னுந் திருக்குறளுரையானும் இஃதினிது விளங்கும். உவர்த்தல்-உப்புக் கரித்தல். பிணித்தல்-கட்டல்.

23-25: பன்முகம்.........................மிடற்றோன்

     (இ-ள்) பல் முகம் விளக்கின்-பல முகங்களையுடைய விளக்குபோல; பரிதியின் தோட்டிய-சக்கரப்படையினால் தோண்டப்பட்ட; குண்டு அகழ்வேலை-ஆழமாகிய பரந்த கடலின்; வயிறு அலைத்து எழுந்த-வயிற்றைத் துன்புறுத்தித்