பக்கம் எண் :

6கல்லாடம்[கடவுள்வாழ்த்து]



தத்தம் இடத்தில் நிலைபெற்றிருக்கும்படி மூத்த பிள்ளையாரின் திருச்செவிகள் அசைகின்றன என்பது கருத்து, அங்ஙனம் அசையாவிடின் அத்தீக்கள் உலகங்களையெல்லாம் அழித்துவிடும் என்பது கருத்து, நிலை-தத்தமக்குரிய இடம், காணி-உரிமை நிலம், பிள்ளையாரின் செவிகள் எழுப்பும் சிறு காற்றே இத்தீக்களை அடக்குதற்குப் போதியதாயிற்று என்பர்ா ‘சிறு காற்று’ என்றர்ா, சிறு காற்று உழலும் செவி எனவும் அசை குழைச் செவி எனவும்ட தனித்தனி கூட்டுக,

19-20; ஆம்பல்,,,,,,,,,,,,,,,,,,,,,,காத்த

     (இ-ள்) ஆம்பல் முக அரக்கன்-யானைமுகத்தையுடைய அரக்கன்; கிளையொடும் மாறிய-தன் சுற்றத்தாருடன் தடுமாறும்படி; பெருங்காற்று விடுத்த-பெரிய காற்றினை வெளிப்படுத்திய; நெடும்புழைக் கரத்த-நெடிய தோளையுடைய துதி்க்கையினை யுடையோய் என்க,

     (வி-ம்.) ஆம்பல்-யானை; ஆம்பல் முகவரக்கன் என்றது கயமகாசுரனை; மறிய-புறமிட்டுத் தடுமாற; புழை-தொளை; கரம்-துதிக்கை,

21-2; கனருமிடற்றுக்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,பதத்த

     (இ-ள்) கருமிடற்றுக் கடவுளை-நீல நிறமுடைய கழுத்தினையுடைய கடவுளாகிய சிவபெருமானிடத்தே; செங்கனி வேண்டி-சிவந்த பழம்பெறுதலை விரும்பி; இடங்கொள் ஞாலத்து-இடமமைந்த உலகமாகவே அப்பெருமானை நினைந்து; வலங்கொளும் பதத்த-அவனையே வலமாக வந்து அப்பழத்தைப் பெற்றுக்கொண்ட திருவடிகளையுடையோய்; என்க,

     (வி-ம்.) கருமிடற்றுக் கடவுள்-சிவபெருமான்; சிவபெருமான் கையிலுள்ள ஒரு பழத்தை இளைய பிள்ளையாரும் மூத்த பிள்ளையாரும் விரும்பிக் கேட்டாராக, அதுகேட்ட சிவபெருமான் நுங்களுள் இவ்வுலகினை வலமாகச் சுற்றி எம்பால் முந்தி வருவார்க்கு இப்பழத்தைத் தருவேன் என்று கூற, அதுகேட்ட முருகக் கடவுள் தன் ஊ்ாதியிலேறி உலகை வலம் வருதற்குச் சென்றாராக, மூத்த பிள்ளையாரோ உலகமெல்லாம் இறைவனுடைய அருளுருவத்தின்கண் அடங்கும் என்பது பற்றி அவ்விறைவனையே வலம் வந்து அப்பழத்தைப் பெற்றுக்கொண்டார். என்னும் புராணக் கதையை இவ்வடிகள் கொண்டுள்ளன, கருமிடறு செங்கனி இடங்கொள் ஞாலம் வலங்கொளும் பதம் என்னுமிவற்றில் முரணணி தோன்றிச் செய்யுளின்பம் மிகுதலுணர்க,

23 - 5; குண்டு..................................ஆதலின்

     (இ-ள்) குண்டுநீர் உடுத்த-ஆழ்ந்த நீரையுடைய கடலை ஆடையாக உடுத்துள்ள; நெடும்பார் எண்ணமும்-நெடிய உலகின்கண் வாழும் உயிர்களின் நினைவுகளையும்; எண்ணா