|
இலக்கமொடு நண்ணிடு துயரமும்-எண்ணுதற்கியலாத
எண்களோடு அவ்வுயிரினங்களுக்கு வருகின்ற துன்பங்களையும்; அளந்துகொண்டு முடித்தல் நின்கடன்
ஆதலின்-அளவிட்டுக் கொண்டு அவ்வுயிர்களின் வினைக்கேற்ப முடித்து வைத்தல் உன்னுடைய
கடமையே யாதலின் என்க.
(வி-ம்.) குண்டுநீர்-கடல்;
பார்-உலகம்; ஆகுபெயராய் உயிரினங்களை உணர்த்தியது. உயிர்களை வினைக்கீடாக எண்ணிவித்தலும்
எண்ணிய அவ்வெண்ணங்களையும் வுனைக்கேற்ப வரையறை செய்துகொண்டு நுகர்வித்தலும் இறைவன்
செயலாதல் பற்றி அளந்து கொடு முடித்தல் நின்கடன் என்றார். இலக்கம்-எண்; அவை ஆம்பல்,
தாமரை, வெள்ளம் முதலியன.
26
- 32: வரி.....................வனங்குதும்
(இ-ள்) வரி உடல்
சூழ-வரிகளையுடைய தனது உடம்பைச் சுற்றி; நூல் குடம்பை நெற்றி-தனது எச்சிலாகிய நூலினாலே
கூட்டினை இயற்றிக்கொண்டு; போக்குவழி படையாது-தான் புறம்போதற்கு வழியமைக்காமல்;
உள் உயிர் விடுத்தலின்-அக்கூட்டினுள்ளேயே உயிர் விடுதலாலே, அறிவு புறம்போய உலண்டதுபோல;
அறிவில்லாதது என்றறியப்படும் அவ்வுலண்டுப் புழுப்போல; கடல்திரை சிறுக மலக்கு துயர்
காட்டும் உடல் என்னும் வாயில் சிறை நடுவு புக்கு- கடலின்கண் எழுந்து மறிக்கின்ற அலைகள்
தாமும் அளவில் சிறுமை உடையனவாம்படி கலங்குவதற்கு காரணமாகிய துன்பத்தை உண்டாக்குகின்ற
உடம்பென்று கூறப்படுகின்ற வெளியேறுதற்கு வாயிலில்லாத இச்சிறைக் கோட்டத்தினுள்ளே
புகுந்து; போகாது உணங்குறும் வெள் அறிவேமும்-அத்துன்பங்கள் வந்து மோதுந்தோறும் அதனை
விட்டுப் போகாமலே பெரிதும் வருந்தா நின்ற அறியாமையையுடைய யாங்களும்; ஆரணம் போற்றும்
நின்கால் இஉற வனங்குவதும்-மறையுணர்ந்த பெரியோர்களாலே உணர்ந்து போற்றப்படுகின்ற
நின் திருவடிகளை மிகுதியாக வணங்குகின்றோம் அஃதெற்றுக்கெனின்; என்க.
(வி-ம்.) வரி-கோடு;
குடும்பை-கூடு; நூலால் குடும்பை தெற்றி என மாறுக. தெற்றுதல்-அமைத்தல்; போக்குவழி-புறம்போதற்குரிய
வழி; உலண்டு-ஒருவகைப் புழு; கோற் புழு. இப்புழு தன் எச்சிலாலேயே தன் உடம்பைச் சுற்றிக்
கூடு அமைத்துக்கொண்டு வெளிப்படுதற்கு வாயில் இல்லாமல் அக்கூட்டையமைத்து அதனுள்ளேயே
இறந்துபடும் என்ப. இச்செயலாலேயே அப்புழு அறிவற்றது என்றுணரப்படும் என்பார் உயிர்
விடுத்தலின் அறிவு புறம் போய உலண்டு என்றார். இவ்வுலண்டுப்புழு வெள்ளறிவினையுடைய
மாந்தர்க்குவமை. என்னை? இவர் தாமூம் தமது பழவினையாகிய நூலால் உடலாகிய கூட்டினை
அமைத்துக்கொண்டு வெளியேறுதற்கும் வழியின்றி அதனுள் அகப்பட்டுக்கொண்டு துன்பத்தால்
வருந்தி
|