பக்கம் எண் :

62கல்லாடம்[செய்யுள்6]



  ஓருழைக் கண்ட வுவகைய தென்ன
வெவ்வுயிர் நிறைந்த செவ்விகொண் மேனியில்
35
  அண்டப் பெருந்திரள் அடைவீன் றளித்த
கன்னிகொண் டிருந்த மன்னருட் கடவுள்
மலையுருக் கொண்ட வுடல்வாள் அரக்கர்
வெள்ளமும் சூரும் புள்ளியற் பொருப்பு
நெடுங்கடற் கிடங்கு மொருங்குயிர் பருகிய
40
  மணிவேற் குமரன் முதனிலை வாழுங்
குன்றுடுத் தோங்கிய கூடலம் பதியோன்
றாடலை தரித்த கோளினர் போல
நெடுஞ்சுர நீங்கத் தங்கா
லடுந்தழன் மாற்றிய காற்குறி யிவணே.

(உரை)
கைகோள் : களவு. செவிலி குற்று

துறை: சுவடு கண்டறிதல்

     (இ-ள்) இதற்கு, “ஏமப் போரூர்ச் சேரியுஞ் சுரத்தும் தாமே செல்லும் தாயரு முளரே” (தொல்-அகத். 40) என்னும் விதிகொள்க. இனி ஆசிரியர் நச்சினார்க்கினியர் இன்னோரன்னவற்றை “எஞ்சியோர்க்கு மெஞ்சுதல் இலவே” (தொல். அகத்-45) என்பதன்கண் அமைப்பர்.

1-3: நிணம்.....................................விடலை

     (இ-ள்) உயிர் உண்ட புலவு நிணம் பொறாது-பகைவர்களுடைய உயிரை உடலினின்றும் அகற்றியதனாலே உண்டான புலால் நாற்றத்தையும் நிணத்தையும் பொறாமல்; தலை உடல் அசைத்து-தன் தலையையும் உடம்பையும் விதிர்த்து; சாணை வாய் துடைத்து-சாணையின்கண் தேய்த்துத் தன் வாயைத் துடைத்துப் பின்னரும், நெய் குளித்து அகற்றும்-நெய்யின் கண் முழுகி அந் நாற்றத்தையும் நிணத்தையும் போக்கிக் கொள்ளும்; நெடுவேல் விடலை-நெடிய வேற்படையை யுடைய தலைமகன் என்க.

     (வி-ம்.) இது கருவி கருத்தாவாயிற்று. உயிருண்ட-கொன்ற. புலவு-புலனாற்றம். தலையையும் உடலையும் அசைத்து என உம்மை விரித்துக் கொள்க. சாணை-படைத்தலங்களைக் கூரிதாக்கும் ஒரு கருவி. பகைவரைக் குத்திய வேலை மற்றவர்கள் கையால் விதிர்த்துச் சாணைபிடித்து நெய்பூசுதல் வழக்கம். அதனைத் தற்குறிப்பேற்றமாக இங்ஙனம் கூறினார். விடலை-பாலைத்திணைத் தலைமகன்.