காற்சுவடுகள் என்க.
ஆதலால் அவர் சென்ற நெரி இதுவே என்பது குறிப்பெச்சம்.
நாட்டிய
கல்லைக் கண்டு மகிழ்ந்ததனாலும், புலிபட்டதனாலும், மறைந்தவேடர்பலருடைய அடிச்சுவட்டினாலும்,
குந்திய காற்சுவடுகளினாலும், அவற்றிற் கெதிர் நின்று விலகிய சுவடுகளாலும், ஆறலை கள்வர்
மாண்டு கிடந்தமையாலும், பதுக்கையருகில் கழிந்த பூவாலும், அணிந்துழி உதிர்ந்த பூவாலும்,
கழுகின் சிறகுகள் உதிர்ந்து கிடந்தமையாலும், மரநீழலில் அழுந்திய சுவடுகளாலும் செவிலி
அவ்வவிடத்து னிகழ்ச்சிகளைக் கண்டறிந்தாள் என்க. இனி விடலை மகிழ்ந்த இடம் இவ்விடம்,
கழிந்த விடம் இது, மகிழ்ந்த இடம், இந்நிலை. தாபதர் ஆசி நாட்டியது இவ்விடம் மெய்தூளாகக்
காட்டுமிடம் இவ்விடம். பாதிரி மலரைப் புனைந்த இடம் இக்கற்பதுக்கை. பார்த்து மகிழ்ந்த
இடம் இவ்விடம். தழலாற்றிய காற்குறியையுடைய விடம் இவ்விடம் ஆதலால் அவர் போயின
நெறி இதுவென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடு அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் உடன்
போக்குணர்தல்.
|