பக்கம் எண் :

72கல்லாடம்[செய்யுள்7]



  நெடுந்தாட் குற்றிலை வாகைநெற் றொலிப்ப
திசைநின் றெழாது தழன்முகந் தேறிச்
30
  சுடலையிற் சூறை யிடையிடை யடிக்கும்
பேரழற் காணினு காடுமென் னுளத்தினு
மொருபாற் பசுங்கொடி நிறைபாட் டயரப்
பாரிடங் குனிப்ப வாடிய பெருமான்
வையைகந் துருவினர் மலரா வறிவினைப்
35
  புலனிரை மறைத்த புணர்ப்பது ப்லக்
குளிர்கொண் டுறையுந் தெளிநீர் வாவியை
வள்ளைசெங் கமலங் கள்ளவி ழாம்பற்
பாசடை மறைக்குங் கூடற் பெருமான்
செந்தாள் விடுத்துறை யந்தர்க டம்மினு
40
  மூவாத் தனிநிலைக் கிருவரு மோருயிர்
இரண்டெனக் கவைத்தநல் லாண்டரு டோழியைச்
செருவிழு மிச்சையர் தமதுடல் பெற்ற
வின்புக நோக்கா வியல்பது போல
மருங்குபி னோக்கா தொருங்குவிட் டகலப்
45
  பொருந்திய தெப்படி யுள்ளம்
மருந்தழற் சுரத்தி லொருவனன் பெடுத்தே.

(உரை)
கைகோள், களவு. நராய் கூற்று

துறை: நற்றாய் வருந்துதல்
(இ-ம்.) இதற்கு, “தன்னும் அவனும்.....................அவ்வழி யிரிய” (தொல். 36) என்னும் நூற்பாவின்கண் அன்னபிறவும் என்ற விதி கொள்க.

1-4: பொடி........................................ஒருவுக

     (இ-ள்) மணிமிளிர் பெருங்கட்கு இமைகாப்பு என்ன-கருமணி திகழ்கின்ற பெரிய கண்ணை இமைகள் பாதுகாக்குமாறுபோலே; பொடித்து அரும்பாத சில் முல்லைக்கொடி மடந்தையள்-வெளிப்பட்டு முகிழாத இரண்டு முலைகளையுமுடைய பூங்கொடி போன்ற மடப்பமுடைய என்மகள்; விழித்துழி விழித்தும்-விழித்த விடத்தே விழித்தும்; அடங்குழி அடங்கியும்-அவள் துயிலுங்காற் சிறிது துயின்றும்; நின்று தன்னை அளித்த-நீங்காது இருந்து தன்னைப் பாதுகாத்த; என்னையும்