பக்கம் எண் :

மூலமும் உரையும்73



ஒருவுக-தாயாகிய என்னைத் தானும் பிரிந்து செல்லினும்செல்க என்க.

     (வி-ம்.) பொடித்து-தோன்றி. இரண்டாதலின் சின்முலை என்றாள். மடந்தையாள் என்பது பருவங் குறியாது மகள் என்னும் பொருட்டாய் நின்றது. மணி-கண்ணின் உள் கருமணி. காப்பு-காத்தல் அடங்குழி-உறங்குங்கால் அளித்த. பாதுகாத்த. என்னையும் என்பது தாயாகிய என்னையும் என்பதுபட நின்றது. உம்மை உயர்வு சிறப்பும் எண்ணும்மையும் ஆம்.

5-6: பன்மணி........................................துறக்குக

     (இ-ள்) உடற்கு பன்மணிக் கலன்கள் அழகு அளித்து ஓங்கியதென-அன்றியும் உடலுக்குப் பல்வேறு மணிகளால் இயன்ற அணிகலன்கள் அதனைச் சூழ்ந்து அழகளித்து மேம்பட்டாற்போல; சுற்று உடுத்து அழகளித்த ஓங்கிய ஆயமும் துறக்குக-தன்னைப் பக்கங்களிலே சூழ்ந்து அணிசெய்து மேம்பட்ட தோழியர் குழாத்தைத்தானும் பிரியினும் பிரிக என்க.

     (வி-ம்.) பன்மணிக்கலங்கள் தோழையர் குழுவுக்குவமை. ஓங்கிய என்னும் சொல்லை உவமைக்கும் அழகளித்து என்னும் சொல்லைப் பொருளுக்கும் கூட்டுக. சுற்று-பக்கம். ஆயம்-தோழியர் குழு. அணிகலன்கள் தாமும் அழகாயிருந்து உடலுக்கும் அழகு செய்து அதனைப் பிரியாது இருப்பது போலே தோழியரும் தாமும் அழகியராயிருந்து தலைவியையும் அழகு செய்து அவளைப் பிரியாதிருப்பர் என்பது கருத்து.

7-14: பிணிமுகம்.................................பிழைக்குக

     (இ-ள்) பிணிமுகம் மஞ்ஞை மூவிரு திருமுகத்து செருமுகத்தேந்திய ஒரு வேலவற்கு-அல்லதூஉம் பிணிமுகம் என்னும் யானையினையும் மயிலினையும் அழகிய ஆறுமுகங்களையும் போர் முனையிலே ஏந்தி ஒப்பற்ற வேற்படையினையுமுடைய முருகவேளுக்கு வெறியாடும் பொருட்டு; வான்உற நிமிர்ந்த மலைத்தலை முன்றில்-வானைத் தீண்டும்படி உயர்ந்துள்ள மலையுச்சியின்கண் அமைந்த முற்றத்தின்கண் களனிழைத்து; மனவு அணி மடந்தை வெறியாட்டாளன்-சங்குமணி அணிந்த மனைவியோடே வரும் தெய்வம் ஏறி ஆடுபவனும்; வேல்மகன்-வேலனும்; குறத்தி-கட்டுவிச்சியும்; மாமதி முதியோர்-மிக்க அறிவினையுடைய முதுபெண்டிரும்; தொண்டகம் துவைப்ப-தொண்டகப் பறை முழங்கவும்; முருகு இயம் கறங்க-முருகவேளுக்குரிய வெறியாட்டுப்பறை முழங்கவும்; ஒருங்குவந்து-ஒருங்கே கூடி; இமையா அரு கடன் முற்றிய பின்னர்-அம் முருகவேளுக்குக் குறைவில்லாத வழிபாட்டினைச் செய்து முடித்த பின்னர்; நின்று ஏற்ற கைத்தாயையும் பிழைக்குக-