|
தன்னை எதிர்பார்த்து
நின்று கைகளாலே தன்னைத் தழுவிக்கொண்ட செவிலித்தாயைத் தானும் பிரிந்து செல்லினும்
செல்க என்க.
(வி-ம்.) பிணிமுகம்-முருகனுக்குரிய
யானை. சேயுயர் பிணிமுகமூர்ந்த எனப் பரிபாடலினும், ஓடாப் பூட்கைப் பிணிமுகம்
வாழ்த்தி எனத் திருமுருகாற்றுப் படையினும் வருதல் காண்க. இனி, பிணிமுகம் மயில்
என்பாருமுளர். ஆகலின் அவர் கருத்திற்கியையப் பிணி முகமாகிய மஞ்ஞை எனினுமாம். மலைத்தலை
முன்றில்-மலையுச்சியில் அமைந்த முற்றம். இது வெறியாடுகளம் என்க. மனவு-அக்குமணி.
மணிப்பொதுவுமாம். மனவணிந்த மடந்தை என்றது வெறியாட்டாளன் மனைவியை. வேன்மகன்-பூசாரி.
குறத்தி-கட்டுவிச்சி முதலியோர். தொண்டகம் முருகியம் என்பன குறிஞ்சிப் பறவைகள்.
இமையா-குறையாத. அருங்கடன்-செய்தற்கரிய வழிபாடு.பின்னர் நின்றேற்ற என்புழி பின்னரிற்
பெற்ற என்றும் பாடம். நின்றேற்ற என்றது, வழிபாடு முடிந்தவுடன் எதிர்பார்த்து நின்று
கைகளாற் றழுவிக் கொண்ட என்றவாறு. கைத்தாய்-செவிலித்தாய். ஈண்டு செவிலித்தாய்
தலைவியின் வேறுபாடு கண்டு ஐயுற்று வேலனை வினாய வழி அவன் இது தெய்வத்தாலுற்ற குறை
என்றானாக; அதுகேட்ட அவள் அத்தெய்வக்குறை தீரும் பொருட்டு அவ்வேலன் முதலியோரை
அழைத்து வெறியாட்டு நிகழ்வித்து அவ்வழிபாடு முடிந்தவுடன் தலைவியை அக்குறை தீர்ந்தாளாகக்
கருதி ஆர்வத்துடன் இரு கைகளாலும் தழுவிக்கொண்ட அவ்வன்புச் செயலை நற்றாய் எடுத்துக்கூறி
இரங்குகின்றாள் என்க.
15-17:
கருத்தலை................................இழக்குக
(இ-ள்) கருந்தலைச்
சாரியை-அல்லதூஉம் கரிய தலையினையுடைய நாகணவாய்ப் புள்ளும்; செவ்வாய்ப் பசுங்கிளி-சிவந்த
வாயினையுடைய பச்சைக்கிளியும்; தூவி அந்தோகை-தூவியாகிய அழகிய தோகையையுடைய மயிலும்;
வெள் ஓதிமம்-வெள்ளை அன்னமும்; தொடர்உழை-தன்னை யாண்டும் தொடர்ந்து வரும் மான்குட்டியும்;
இவையுடன் இன்பமும் ஒருவழி இழகுக-ஆகிய இவற்றோடே அவள் ஆடி நுகரும் இன்பங்களையும் ஒருசேர
இழப்பினும் இழக்க என்க.
(வி-ம்.) சாரியை-நாகணவாய்ப்புள்.
தூவியந்தோகை: பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. தூவியாகிய அழகிய
தோகையையுடைய மயில் என்க. ஓதிமம்-அன்னம். உழை-மாங் இவையுடன் ஆடுதலால் வரும் இன்பமும்
என்க. ஈண்டு நாகணவாய்ப்புள் முதலிய இவ்வஃறிணைத் தோழருடன் விளையாடும் இன்பத்தையும்
இழக்கத் துணிந்தாளே! வன்கண்ணள் என்று நற்றாய் இரங்குகின்றாள். என்க.
18-19:
சேயிதழ்......................................அலமர
(இ-ள்) சே இதழ்
இலவத்து உடை காய்ப் பஞ்சினம் புகை முரிந்து எழுந்து எனவிண்ணத்து அலமர-சிவந்த மலர்
|