பக்கம் எண் :

மூலமும் உரையும்75



களையுடைய இலவமரத்தின்கண் முதிர்ந்து வெடித்த காயினுள் பஞ்சுக்கூட்டம் தீயின்கண் உண்டாகிய புகை உடைந்து எழுந்து சுழன்றாரற் போல வானின்கண் சுழலா நிற்பவும் என்க.

     (வி-ம்.) இலவம்-ஒருவகை மரம். உடைக்காய்:வினைத்தொகை. முரிந்தெழுதல்-உடைந்தெழுதல். விண்ணத்து, அத்து; சாரியை. அலமரல்-சுழலல். இலவம் பஞ்சு விண்ணிற் சுழலுதற்குத் தீயின்கண் எழும்புகை உடைந்து சுழலுதல் உண்மை.

20-21: குழை...................................தவழ

     (இ-ள்) குழை பொடி கூவையின் சிறை-இலைகரிந்த கூவையின் பக்கத்தில்; சிறை ட்க்ஹீய்ந்த பருந்தும் ஆந்தையும்-சிறகுகள் கரிந்துபோன பருந்துகளும் ஆந்தைகளும்; பார்ப்புடன் தவழ-தத்தம் குஞ்சுகளோடு பறத்தலாற்றாது நிலத்திலே தவழாநிற்பவும் என்க.

     (வி-ம்.) குழை-இலை. பொடிதல்-கரிந்து போதல். கூவை-கிழங்குடைய ஒரு செடி. தீந்தன என்றும் பாடம்.

22-23: உடை.......................................குழற

     (இ-ள்) உடைகவட்டு ஓமை உயர்சினை இருக்கும்-பிளந்த கிளையினையுடைய ஓமைமரத்தின் உயர்ந்த கிளையில் இருக்கிற; வளைகண் கூகை மயங்கி வாய்குழற-வளைந்த கண்களையுடைய கூகைகள் வெப்பத்தால் மயங்கி வாய்குழறா நிற்பவும் என்க.

     (வி-ம்.) ஓமை-ஒருவகை மரம். வெப்பத்தால் மயங்கி என்க.

24-27: ஆசை...........................................தெறிப்ப

     (இ-ள்) குழிகண் கரும்பேய்-குழிந்த கண்களையுடைய கரிய பெண் பேய்கள்; ஆசையின் தணியா அழல்பசி தணிக்க-அவாப்போல் என்றும் தணியாத தீயையொத்த தமது பசியைத் தணித்துக் கொள்ளும் பொருட்டு; காளி முன் காவல் காட்டி வைத்து ஏகும்-காளிக்கு முன்னர்க் காவலாகக் காட்டி வைத்துப்போற்றுகின்ற; மகவுகண் முகிழ்ப்ப-பிள்ளைப் பேய்கள் தங்கண்களை மூடிக்கொள்ளும்படி; வேம் உடல் சின்னம் வெள் இடைதெறிப்ப-அங்கு வேவா நின்ற பிணத்தின் உடற் குறைகள் வெட்ட வெளியிலே தெறியா நிற்ப என்க.

     (வி-ம்.) ஆரா இயற்கை அவா என்பது பற்றித் தணியாத பசிக்கு உவமை எடுத்தார். பேய்கள் இரைதேடப் புறப்படும் போது தம் மகவினைக் காளியின் முன்றிலே போகட்டுக் காளியைக் காக்கும்படி வேண்டிச் செல்கின்றன என்க. கடும்பேய் என்றும் பாடம். உடல்-ஈண்டுப்பிணம்.