பக்கம் எண் :

76கல்லாடம்[செய்யுள்7]



28: நெடு..........................................ஒலிப்ப

     (இ-ள்) நெடுந்தாள் குறுஇலை வாகை நெற்று ஒலிப்ப-நெடிய காலையும் குறிய இலைகளையுமுடைய வாகை மரத்தின் நெற்றுக்கள் ஒலியா நிற்பவும் என்க.

     (வி-ம்.) நெடுந்தாள் குறுஇலை என்புழிச் செய்யுளின்பமுணர்க. நெற்று-முதிர்ந்துலர்ந்த காய்.

29-33: திசை......................................பெருமான்

     (இ-ள்) சுடலையில் சூறை திசை நின்று எழாது தழல் முகந்து ஏறி இடை இடை அடிக்கும் பேர் அழல் கானினும்-சுடுகாட்டிகண் சூரைக்காற்றுத் திக்குகளினின்றும் எழாமல் இடை இடையே தோன்றித் தீயினை அள்ளிக்கொண்டு வானிலுயர்ந்து வாய்விட்டுச் சுழலுதற்கிடனான பெரிஅ அழற்காட்டின் கண்ணும்; நாடும் என் உள்ளத்தினும்-விரும்புகின்ற அடியேனுடைய நெஞ்சிடத்தினும்; ஒருபால் பசுங் கொடி நிறைபாட்டு அயர-தன்னிடப்பாகத்திலிருக்கும் பசிய பூங்கொடி போல்வாளாகிய உமையம்மையார் தன் ஆடலுக்கேற்ப இலக்கணம் நிறைந்த வெண்டுறைப் பாட்டைப் பாடவும்; பாரிடங் குனிப்ப ஆடிய பெருமான்-பேய்க்கூட்டங்கள் களிக்கூத்தாடவும்; கூத்தாடிய பெருமானும் என்க.

     (வி-ம்.) சுடலை-சுடுகாடு, சூறை-சுழல்காற்று. திசைநின்றெழாது என்றது ஞெரேலென ஒவ்வோரிடத்தே தோன்றி என்றவாறு. சுடுகாட்டினும் என் உள்ளத்தினும் ஒப்ப நின்று ஆடிய பெருமான் என்றவாறு. ஒருபால்-இடப்பாகம். பசுங்கொடி-உமையம்மையார். நிறைபாட்டு: வினைத்தொகை. இறைவன் கூத்தாடுங்கால் அம்மை பாடுவாள் என்னுமிதனை,

“ஆறறி யந்தணர்க் கருமறை பலபகர்ந்து
 தேறுநீர் சடைக்கரந்து திரிபுரந் தீமடுத்துக்
 கூறாமற் குறித்ததன்மேற் செல்லுங் கடுங்கிளி
 மாறாப்போர் மணிமிடற் றெண்கையாய் கேளினி;”

(கலி. க. கட.) எனவரும் கலித்தொகையாலும் உணர்க. அயர, குனிப்ப, ஆடிய பெருமான் என்க. பாரிடம்-பேய்

34-39: வையகத்து...............................................தம்மினும்

     (இ-ள்) வையகத்து உருவினர் மலரா அறிவினை-நிலவுலகத்தில் உடல்கொண்டு பிறகும் மாந்தருடைய கல்வி கேள்விகளால் மலராத சிற்றறிவினை; நிரை புலன் மறைத்த புணர்ப்பது போல-நிரல்பட்ட சுவை முதலிய ஐம்புலன்களும் மறைத்த செயல் போல; குளிர் கொண்டு உறையும்