|
(வி-ம்.)
பாசடை - பசிய இலை. காடு-ஈண்டுக் கூட்டம். கருவரிச் செங்கண் என்புழிச் செய்யுளின்பமுணர்க.
வரால்-ஒருவகை மீன். எரி-நெருப்பு, முண்டகம்- தாமரை, கயல்-ஒருவகை மீன். பன்னம்-இலை,
குப்பை - கூட்டம், சொரியெயிறு-சொரிந்து வைத்தாற்போன்ற பல். பேழ் - பெரிய.
30
- 34: படிந்து . . . . . . . . . . போகி
(இ-ள்)
படிந்து சேடு எறியும் செங்கண் கவரியும் - நீரிற் களித்துச் சேறாக்குகின்ற சிவந்த
கண்ணையுடைய எருமைகளும்; மலைசூழ் கிடந்த பெருங்குலைப் பரப்பை- மலை சூழ்ந்திருந்தாலொத்த
பெரிய கரையின் பரப்பினை; மலைகொடு மலைந்த முதுநீர் வெள்ளமும் - தான் பெயர்த்துக்
கொண்டு வரும் மலைகளால் உடைக்கின்ற கடல்போன்ற நீர்பபெருக்கும்; மிடைந்து வயல்திரிந்து
முதுகுசரிந்து உடைந்து- நெருங்கி வயல்கள் மாறுபட்டு அவற்றின் வரம்புகள் சரிந்து உடைபட்டு;
சிறியோன் செய்யும் செரு என - குறுநில மன்னன் செய்யும் போர்போல; முறியப்போகி
- முறியும்படி சென்று என்க.
(வி-ம்.)
படிதல் - குளித்தல். சேடு - சேறு. கவரி - எருமை, குலை - கரை, முதுநீர் வெள்ளம் -
முதுநீர் போன்ற வெள்ளம், முதுநீர் - கடல், எருமைகளும் வெள்ளமும் மிடைந்து என்க.
திரிதல் - வரம்பற்றுப் போதல். முதுகு - வரம்பின் உச்சி. சிறியோன் என்றதற்குக்
கீழ்மகன் எனினுமாம். கீழ்மகன் போர்செய்யுங்கால் முறையறச் செய்வானாகலின் வெள்ளம்
வயல் முதலியவற்றைத் திரித்தலுக்கு உவமையாக்கப்பட்டான் என்க.
35
- 36: உழவக் . . . . . . . . . . ஊரர்
(இ-ள்)
உழவக் கணத்தை குலைக்குடி புகுத்தும் - உழவர் கூட்டத்தைச் செய்கரையினிடத்துக் குடிபோகச்
செய்கின்ற; பெருநீர் ஊரர் - பெருந்தன்மையுடைய மருத நிலத்தூரையுடை தலைவர் என்க.
(வி-ம்.)
வெள்ளம் முறை பிறழ்ந்தோடி உழவர்களைக் குடிபோகச் செய்வதுபோல நந்தலைவரும் முறை
பிறழ்ந்தொழுகி யாம் இல்லறம் செய்யாது கெடுக்கின்றனர் என இதன்கண் உள்ளுறை காண்க.
உழவக்கணம் - உழவர் கூட்டம். குலை - செய்கரை. பெருநீர் - பெருந்தன்மை. பெருநீர்
ஊரர் என்றது இகழ்ச்சி.
1
- 6: கொன்றை . . . . . . . . . . சடையோன்
(இ-ள்)
வண்டும் தேனும் ஞிமிறம் சுரும்பும் - வண்டும் தேனும் ஞிமிறும் சுரும்பும் ஆகிய இந்நால்வகை
வண்டினங்களும்; கொன்றை அம் துணரில் செவ்வழி குறித்தும்- தான் அணிந்துள்ள கொன்றையினது
பூங்கொத்தின்கண் செவ்வழி என்னும் பண்ணைப் பாடியும்; வால்உழை எருக்கில் வளர் உழை
|