பக்கம் எண் :

1174சித்தாந்த சாத்திரம் - சங்கற்பநிராகரணம்

  பதினாற் கரணத் தொருமூன் றவத்தை
நாளும் நாளும் நயந்துறும் இருபயன்
35 தன்னிற் சாராத் தொன்மைத் தன்மை
தற்பண நிழற்கண் குற்றிபாய்ந் தற்றே
இவ்வியற் பந்தப் பவ்வம தகல
விண்முதல் தந்த கொண்மூப் படலத்(து)
இருள் அற உதித்த கால் தக விவேகந்

இதன்றியும்; பதினாற்கரணத்து ஒருமூன்று அவத்தை நாளும்நாளும் நயந்துறும்
- சோத்திராதிகள் ஐந்தும் வாக்காதிகள் ஐந்தும் அந்தக்கரணங்கள் நாலும்
ஆகப் பதினாலோடுங் கூடிப் புருவமத்தியத்திலே சாக்கிராவத்தையும், இதிலே
சோத்திராதியும் வாக்காதியும் நிற்க அந்தக் கரணங்களோடுங் கூடிக்
கண்டத்தானத்திலே சொற்பனாவத்தையும், இதிலே மனோபுத்தி யாங்காரம்
நிற்கச் சித்தத்தோடுங் கூடி இதயத்தானத்திலே சுழுத்தியவத்தையும், இந்த
அவத்தைகளிலே நாடோறும் நாடோறும் பொருந்தியனுபவியா நிற்கும்.
அறிவானது இந்த அவத்தைகளோடுங் கூடி யனுபவிக்குமாயின் இதற்குப்
புண்ணிய பாவத் தொந்தனை யில்லையாமோ வென்னில்; இருபயன் தன்னிற்
சாராத் தொன்மைத் தன்மை தற்பண நிழற்கண்குற்றி பாய்ந்தற்றே - இந்த
அவத்தைகளோடுங் கூடி நின்றதாமாயினும் அனாதியே புண்ணிய பாவத்
தொந்தனை இந்தப் பிரமத்தைச் சாராது. அது எத்தன்மைத் தென்னிற்
கண்ணாடியிலே ஒருவன் முகம் பிரதிவிம்பிஞ் செய்தவிடத்து அந்த முகத்திற்
கண்ணிலே பாரைகொண்டு பாய்ந்தவிடத்து அந்தக் கண்ணாடி யுடைந்த
தொழிந்து கண்ணுக்கு ஈனம் வாராதிருந்தாற்போலுமெனக் கொள்க. இது
பெத்த தசை.

      மேல் முத்திதசை யருளிச்செய்கிறார்; இவ்வியற் பந்தப் பவ்வமது
அகல - இப்பொழுது நான் சொல்லிவந்த முறைமையிலே இந்தப் பிரமத்தை
வாதிக்கப்பட்ட மாயாவுபாதிகளி லுண்டாகிய பிறவித் தொந்தனை இதற்கு
நீங்குகை நிமித்தமாக; விண் முதல் தந்த கொண்மூப் படலத்து இருள் அற
உதித்த கால் தக - ஆகாசமென்கிறதிலே நின்று மேகமானது தோன்றி அந்த
ஆகாசத்தை மறைக்க, அதனாலுண்டாகிய இருளானது நீங்குகை நிமித்தமாக
அந்த ஆகாசத்திலே நின்றுந் தோன்றி அந்த மேகங்களை நீக்கி ஆகாசத்தை