பக்கம் எண் :

3. மாயாவாதி சங்கற்பம்1175


40 தன்னில் தோன்றிச் சாதக மனைத்தையும்
மன் அகப் பிரிப்பும் மடியிழை வாங்கலும்
போல ஞாலம் பொய்யறக் கழீஇத்
தானே தானாய்த் தன்னில் தன்னைத்
தானே கண்டு தன்நலம் உற்று
45 வசையில் தத்துவ மசிபதத் தெளிவால்
அகமே பிரம மாயினன் என அறிந்(து)
அசல னாகிநற் சலசல மதியெனக்

நின் மலமாக்குவித்த வாயுவைப்போல; விவேகந்தன்னில் தோன்றி - அந்தப்
பிரமத்திலே நின்றும் விவேககியானந் தோன்றி; சாதகமனைத்தையும் - இந்தப்
பிரமத்துக் குண்டான மறைப்புக்க ளெல்லா வற்றையும்; மன்அகப் பிரிப்பும்
மடியிழை வாங்கலும்போல ஞாலம் பொய் அறக் கழீஇ - நிலைபெற்று
வாராநிற்கிறதொரு வீட்டை ஒருத்தன் ஓரொரு வைக்கோலாகவும் ஒரொரு
கழியாகவும் ஓரொருமரமாகவும் நாளிலே பிடுங்கிப்பிடுங்கிப் போட்டபின்பு
அந்த வீடென்கிற சொரூபம் இல்லையாய்ப்போன தன்மைபோலவும் ஒரு
புடைவையை ஒருத்தன் ஓரோ ரிழையாக நாளிலே பிடுங்கிப் பிடுங்கிப்
போட்டபின்பு அந்தப் புடைவை யென்கிற சொரூபம் இல்லையாய்ப் போன
தன்மைபோலவும், பிரபஞ்சமாகிற பொய்யையும் பிருதிவி முதலாகக்கொண்டு
இது நானல்ல இது நானல்லவென்று நேதி பண்ணி நாளிலே நீக்கிக்கொண்டு;
தானே தானாய் தன்னில் தன்னைத் தானே கண்டு தன் நலமுற்று - இப்படி
அந்த உபாதிகள் நீங்கின விடத்து அந்த அறிவானது அந்தப் பிரமந்
தானேயாய்த் தன்னிடத்திலே தற்சொரூபத்தை தானே தரிசித்துத் தன்னிடத்
திலுண்டாகிய இன்பத்தைத் தான் தானே அனுபவித்து; வசையில் தத்துவமசி
பதத் தெளிவால் அகமே பிரமமாயினன் என அறிந்து - குற்றமற்றிருக்கிற
தத்துவமசி பத மென்கிற மகா வாக்கியத்தின் தெளிவு கொண்டு அந்தப்
பிரமம் நானானேன் என்கிற பிரமக்கியானத்தைத் தீரவிளங்கி; அசலனாகி -
இந்தப் பிரமக்கியான முண்டான விடத்துப் பின்னைச் சற்றுஞ் சலன
மில்லாதவனாய்; உபாதிகளோடுங் கூடிச்சத்தாதி விடயங்களைப் பொசிக்கச்
செய்தே சலனமில்லையென்றதென்னெனில்; நற் சலசல மதியெனக் கண்டிடும்
- உபாதிகளோடுங்