| 50 | கண்டிடும் உடலம் விண்டகல் கடத்து மங்குல துடைதர எங்குமாம் தகைத்தே இவ்வகை யுணர்ந்து செய்தொழில் அறாத | | 55 | மடவோர் தாமும் கடனா இயற்றுங் கன்ம காண்டத் தொன்மைப் புரிவால் தோற்றிய வித்தை மேற்கடை அரணியில் எழுந்தெரி அவற்றை விழுங்கிய தென்னத் தன்னொழிந் துள்ள தானா யொழியும் | கூடிச் சத்தாதி விஷயங்களைப் பொசிக்கச்செய்தே அந்த உண்மைக்குச் சலன மில்லாதது, நல்ல சலமானது அசைந்த விடத்து அத்தோடுங் கூடின சந்திரனும் ஒக்க அசைந்தாற்போலே; அந்தச் சந்திரனுண்மையைப் பார்த்தவிடத்து அது அங்கில்லையானாற்போல அப்படி இந்த அறிவையுங் காணப்படும். இது சீவன்முத்த ரிலக்கணம். இனிப் பரமுத்த ரிலக்கணம்: உடலம் விண்டகல் கடத்துமங்குல் அது உடைதர எங்குமாந் தகைத்தே - இந்தச் சரீரதொந்தனை விட்ட அவதரத்து இந்த அறிவும் அந்தப்பிரமமுந் தன்னி லொன்றுபட்டுவிட்டது என்போல வென்னில், இடவிதாயிருக்கிற குடத்துக்குள்ளே அகப்பட்டு நின்ற ஆகாயம் இந்தக் குடமானது உடைந்த அவதரத்து அந்தப் பராகாசமுந் தானும் ஒன்றுபட்டாற் போலவா மெனக் கொள்க. இது பரமமுத்தி; இவ்வகை யுணர்ந்து செய் தொழில் அறாத மடவோர் தாமும் - அது நானானேன் என்கிற பிரமக்கியானத்தை யறிந்து தான் முன்பு செய்துவந்த கன்மங்க ளெல்லாவற்றையும் விட்டுவிட மாட்டாத அறிவில்லாதவர்கள் தாங்களும்; கடனா இயற்றுங் கன்மகாண்டத் தொன்மைப் புரிவால் தோற்றிய வித்தை - அந்தப் பிரமஞானமுண்டாகை நிமித்தமாகச் சாதன சதுட்டயமாகிய கன்மங்களை யனுட்டித்து அந்தத் தொழில்களைப் பழகச் செய்து வரவே விவேகக்கியானமானது அவர்களுக்கு உண்டாகாநிற்கும்; மேற்கடை அரணியில் எழுந்து எரி அவற்றை விழுங்கியதென்னத் தன்னொழிந் துள்ள தானா யொழியும் - அப்படி யுண்டான விவேகமுந் தீக்கடைக்கோலை மேலே வைத்துக் கடைய அந்தத் தொழிலினாலே யுண்டாகிய நெருப்பு அந்த அரணியையுங் கோலினையுஞ் சேரச் சுட்டுப்போட்ட தன்மைபோலத் தான் ஒன்றுமொழிந்து |