பக்கம் எண் :

4. மாயாவாதி நிராகரணம்1177


  அந்நிலை யன்றி அழிவறி முத்தி
ஏயா தென்றுதன் இயல்பை
மாயா வாதி வகுத்துரைத் தனனே.

4. மாயாவாதி நிராகரணம்

5 உரைதரு பிரமம் ஒன்றெனும் உரைக்கண்
வருபிர மாணம் மறையெனில் அருமறை
ஒன்றென்ற தன்றி இருபொருள் உரைத்தல்
நன்றன் றபேதம் நாடிய பொருளேற்
பேதமும் அபேதமும் ஓத வேண்டா

மற்றுண்டாகிய கன்மங்க ளெல்லாவற்றையும் அழித்துப் போடாநிற்கும்;
அந்நிலையன்றி - அந்த நிலையிலே நின்றுவிடக் கடவன்; அது ஒழிந்து;
அழிவறு முத்தி ஏயாதென்று தன் இயல்பை மாயாவாதி வகுத்து உரைத்
தனனே - நிலைபெற்றுடைய தாயிருக்கிற முத்திப்பேறு பொருந்தாது.
இப்படியே தன்னுடைய பெத்தத்திலும் முத்தியிலு முண்டாகிய முறைமை
யினை மாயாவாதியானவன் வித்தரித்துச் சொன்னான். மேல் ஐக்கியவாதி
மறுக்கிறான்:                                                  3

     (உரை) உரைதரு பிரமம் ஒன்றெனும் உரைக்கண் வரு பிரமாணம்
மறையெனில் - நீ பெத்தமாகவும் முத்தியாகவும் கூறின உன்னுடைய மதத்தின்
தாற்பரியம் பிரமமொன்றுமே யுள்ளதென்று சொல்லுமிடத்து ஒன்றென்றதற்குப்
பிரமாணம் ஏதென்னில், வேதமே பிரமாணமாயிருக்கு மென்னில்; அருமறை
ஒன்றென்ற தன்றி இருபொருள் உரைத்தல் நன்றன்று - அரிய வேதமானது
பிரமமொன்றுமே யுள்ளதென்று சொல்லுவதன்றிச் சீவபரமென்று இரண்டாகச்
சொல்லச்செய்தே நீ இட்ட பிரமாணத்துக்கு நன்றாகாது; அபேதம்நாடிய
பொருளேல் - வேதம் அப்படிஇரண்டென்றதும் அபேத சித்தாந்தத்தைச்
சொன்னதாயிருக்குமென்னில்; பேதமும் அபேதமும் ஓதவேண்டா - நீ
ஒன்றென்றதற் கிட்டபிரமாணம் இரண்டென்றும் இரண்டல்லவென்றுஞ்
சொல்ல வேண்டுவதில்லை; பேதமென்றும் அபேதமென்றும் பேதாபேத
மென்றும் வேதஞ்சொல்கிற தெல்லாம் அந்தப் பிரமமொன்றையுமே
யென்னில்; பேதமெனினும்