பக்கம் எண் :

1178சித்தாந்த சாத்திரம் - சங்கற்பநிராகரணம்

10 பேத மெனினும் அபேத மெனினும்
பேதா பேத மெனினும் அமையும்நின்
ஐயமில் உரையிற் பையவந் துள தாம்
திகழ்பிர மாண இகழ்வுமுண் 1டன்றிப்
பெத்தம் பேத முத்தி அபேதமேல்
15 அநவத் திதமாம் அவை இரு திறனும்
இனி அப் பழமொழி இரண்டல ஒன்றேல்
அன்றியும் பெத்தம் பேதத் தறைதலும்
ஒன்றிய முத்தி அபேதத் துரைத்தலும்
பழுதாம் இத்திறன் பதையா தாய்கமற்(று)

அபேதமெனினும் பேதாபேதமெனினும் அமையும் நின் ஐயமில் உரையிற்
பையவந் துளதாம் திகழ்பிரமாண இகழ்வும் - வேதம் இரண்டென்றாலும்
இரண்டல்லவென்றாலும் இரண்டுமாய் இரண்டல்லவு மாயிருக்குமென்றாலும்
அமைவு பிரிந்திருப்பதா யிருக்கிற உன்னுடைய சந்தேகமற்றிருக்கிற
சாத்திரத்திலே விசாரித்துப் பார்க்குமிடத்துக் கிரமத்திலே விளங்கப்பட்ட
பிரமாண விரோதமும் உண்டாகாநிற்கும்; உண்டன்றிப் பெத்தம் பேதம்
முத்தி அபேதமேல்- அப்படிப் பிரமாண விரோதம் உண்டாகாது காணும்,
அந்த வேதம் பெத்தத்திற் பேதமென்றும் முத்தியில் அபேதமென்றுஞ்
சொல்லு மென்னில்; அநவத்திதமாம் அவை இருதிறனும் - சாத்திரம்
பெத்தத்திற் பேதமென்றும் முத்தியில் அபேதமென்றுஞ் சொன்ன
இரண்டுவகையையும் விசாரித்துப் பார்க்குமிடத்து உன்னுடைய சாத்திரம்
அறுதியில்லாததாம். ஆகையால் சாத்திர விரோத முண்டென்கிறது தப்பாது;
இனி அப் பழமொழி இரண்டல ஒன்றேல்-நான் அநவத்திதமா யிருக்கு
மென்றதுகொண்டு நீ இப்பொழுது அந்தப் பழைய மொழியாகிய வேதம்
இரண்டென்று சொல்லாது ஒன்றென்றே சொல்லுமென்னில்; அன்றியும்
பெத்தம்பேதத் தறைதலும் ஒன்றிய முத்தி அபேதத் துரைத்தலும் பழுதாம்
இத்திறன் பறையாது ஆய்க - முன்னே இரண்டென்று சாத்திரஞ் சொல்லி
இப்பொழுது ஒன்றென்று சொன்ன தோஷமன்றியும் பெத்த தசையிற் சீவபர
மென்று இரண்டாயிருக்கு மென்றதும் முத்தி தசையிற் சீவபரமிரண்டும்
ஒன்றாயிருக்குமென்றதுங் குற்றத்தை யுடைத்தாயிருக்கும்.


     1. டன்றப், டானற் - பாடபேதம்.