| | எழுதா மொழியெனும் இப்பிர மாணம் ஆர்உரை தானே யாயின தேல்உன தேகம் அநேக முறும்இயம் பாமற் சத்த ரூபந் தகாதெனில் வானத்(து) | | 20 | ஒத்தொலி உறழும் எனில்வறி துதியா(து) அன்றியும் பதமும் பாழியும் அனைத்தும் இன்றிஓர் ஒலியாய் எழுந்திடும் அதனுக்(கு) அறிவில துருவில தறியா தறையா(து) | இப்படி நான் சொன்ன வகையைப் பதறாமல் ஆராய்ந்து பார்ப்பாயாக; மற்று எழுதா மொழியெனும் இப்பிரமாணம் ஆர் உரை அது ஒழிந்து எழுதப்படாத வேதமாகிய இந்தப் பிரமாணம் ஆராலே சொல்லப்பட்டது; தானே ஆயினதேல் - அது ஒருவராற் சொல்லப்பட்டதல்ல. சுயம்புவாயுள்ள தொன்றென்னில்; உனது ஏகம் அனேகம் உறும் - நீ பிரமம் ஒன்றென்றது போய்ப் பிரமம் ஒரு முதலும் வேதம் ஒரு முதலுமாக உன்னுடைய ஏகம் அனேகமாகப் பொருந்தா நின்றது. இதன்றியும்; இயம்பாமற் சத்த ரூபந் தகாதெனில் - ஒருவர் உச்சரியாமற் சத்தினுடைய சொரூபந் தானுகத் தோன்றா தென்னில்; வானத்து ஒத்து ஒலி உறழுமெனில் - ஆகாசத்திலே ஒருவர் உச்சரியாமற் சத்தமானது உண்டானாற் போல வேதமும் ஒருவர் சொல்லாமல் தானே உண்டாகாநிற்குமென்னில்; வறிது உதியாது - ஆகாயத்திலே வாயுஏதுவாகக் கொண்டு சத்தம் உண்டாவ தொழிந்து சும்மா சத்தந் தோன்றாது; அன்றியும் பதமும் பாழியும் அனைத்து மின்றி ஓர் ஒலியா யெழுந்திடும் அதனுக்கு அறிவிலது - அதன்றியும், பதமென்றுங் கிரம மென்றும் பாழியென்றும் பின்னும் பலசத்தங்களும் அர்த்தங்களுமாயிருக்கும் வேதமானது;இப்படியன்றி ஆகாசத்திற் சத்தம் ஒரு பிரகாரமாயிருக்கும், அந்தச் சத்தத்துக்கு அறிவென்பதொன்றில்லை; இந்த வேதம் அறிவாயிருப்ப தொன்றாகையால் அந்த ஆகாசத்திலுண்டாகிய சத்தம் போலும் இந்தவேத மென்று சொல்லலாகாது; வேதந்தானே உண்டாகாதென்றால் இந்த வேதத்தைச் சொன்னார் சிலர் வேண்டும். இதற்கு; உருவிலது அறியாது அறையாது-இந்தச் சரீ ரத்தாலே சொல்லப்பட்டது வேதமென்னில், இது சுத்தசடமா யிருந்தபடியாலே ஒரு சத்தத்தையும் அர்த்தத்தையுஞ் |