பக்கம் எண் :

1180சித்தாந்த சாத்திரம் - சங்கற்பநிராகரணம்

25 அன்றியும் அவ்வகை யகண்டிதம் அதுஇது
என்றது குறிப்ப தெவ்வகை யாவும்
30
 
ஒன்றெனும் உரையும் ஒழிந்தனை யன்றே
அருமறை பிரம வுரையெனில் அதற்குத்
தந்தம் தாலு முதல்நவில் பொறியில(து)
என்னில் ஓர் உடற்கண் மன்னிய அலகை
அறைந்தற் றென்ப தார்சொல தமலத்
திறம்பெற் றின்றே செய்தோர் பெயராற்

சொல்லமாட்டாது; அன்றியும் அவ்வகை அகண்டிதம் அதுஇது என்று அது
குறிப்பது எவ்வகை - அந்தச் சரீரத்தின் பகுதியையன்றியும் பிரமத்தினுடைய
தன்மையை விசாரிக்கில் அது கண்டிக்கப் படாததாய் அகண்டிதமாயிருந்த
படியாலே சத்தத்தையும் அர்த்ததையுஞ் சுட்டிச் சொல்லும் பகுதி எப்படி;
யாவும் ஒன்றெனும் உரையும் ஒழிந்தனை யன்றே - ஆகையால் எல்லாம்
ஒன்றேயென்று சொன்ன சொல்லையும் விட்டுவிட்டாயாகும்; அருமறை பிரம
வுரையெனில் - அரிய வேதமானது அந்தப் பரப்பிரம்மத்தாலே உச்சரிக்கப்
பட்ட தென்னில்; அதற்குத் தந்தம் தாலுமுதல் நவில்பொறி இலது - அந்தப்
பிரமம் அகண்டிதமாகையால் பல் நாக்கு முதலாக இதற்குச் சொல்லப்பட்ட
கருவிகள் இல்லாதபடியால் அந்தப் பிரமத்தாற் சொல்லப் படாது; என்னில்
ஓர் உடற்கண் மன்னிய அலகை அறைந்தற்று - அந்தப் பிரமத்தாலே
வேதஞ் சொல்லப்படாதென்னில், பேயானது ஒருவன் சரீரத்திலே நிலை
பெற்றுநின்று வருகாலத்தின் நிகழ்ச்சிகளைச் சொன்னாற்போல, அந்தப்
பிரமமும் ஒருவருடலைச் சார்ந்து நின்று வேதத்தைச் சொல்லும்; என்பது
ஆர்சொல் அதுஅமலத்திறம்பெற்றின்றே - அப்படி ஓர் உடலைச் சார்ந்து
நின்று வேதத்தைச் சொல்லு மென்றது ஒரு தேவரைச் சார்ந்தோ ஒரு
ரிஷியைச் சார்ந்தோ, ஆரைச்சார்ந்து நின்று வேதத்தைச் சொல்லப்பட்டது?
அப்படிஒரு வரைச்சார்ந்து நின்று சொன்னதாமாகில், அது பசுவாக்கியம்,
ஆகையால் அந்தச் சொல்லுக்கு நின்மலத்துவ முண்டாகாது. பின்னை
வேதத்தைப் பிரபஞ்ச மெல்லாஞ் சுயம்பு வென்று சொல்வதே னென்னில்;
செய்தோர் பெயராற் சுயம்பு வென்று உலகு இயம்பு மென்று அறி இனி -
நிஷ்களமாய் நின்ற கர்த்தா சகளீகரித்து அவனாலே