| 35 | சுயம்பு வென்றுல கியம்பும்என் றறிஇனித் தற்கீழ்த் தலைவரைத் தான்தொழு துரைக்குஞ் சொற்கேல் புரவலன் ஏவ லமைச்சரை 1அடியேம் மற்றெம் குடிமுழு தாள்மின் என்(று) | | 40 | ஏத்தி இறைஞ்சிற் காப்பர்கள் என்றாங்(கு) ஈசன் நாம்செயப் பேசினன் அன்றி இனையவை பிறரிற் கனவினும் இலனே தன்னைத் துதிக்குஞ் சொன்னலந் தாமனுமத் துறை அறி வாணர்க் கறைவதொன் றன்றியும் | பிறந்து அவ்வேதம் உச்சரிக்கப்படுகையாலே இதைச்சொன்னவன் சுயம்பு வாகையால் இந்த வேதத்தையுஞ் சுயம்புவென்று உலகஞ் சொல்லாநிற்கும். இது இப்படியிருக்கு மென்று மேலறிவாயாக; தற்கீழ்த் தலைவரைத் தான் தொழுதுரைக்குஞ் சொற்கேல் - வேதம் உம்முடைய கர்த்தா சொன்னதாகில், அவன் தனக்குக் கீழாயுள்ள தேவதைகளைச் தான் நமஸ்கரித்துச் சொல்ல வேண்டுவானே னென்னில்; புரவல னேவலமைச்சரை அடியேம் மற்றெம் குடி முழுதாள்மின் என்று ஏத்தி இறைஞ்சின் காப்பர்களென்றாங்கு ஈசன் நாம் செயப் பேசினன் - இராசாவினுடைய குடியாயுள்ளவர்க ளெல்லாரும் அந்த இராசாவைக்கண்டு தங்கள்மேற்கருமஞ்சொல்லிக்கொள்ள மாட்டார்கள். வாசலிற் காரியப்பேர்களைக் கண்டு அடியோங்கள் தேவரீர்க்குப் பழைய அடிமையாயிருக்குமென்று வணங்கினவிடத்து அவர்களுக்குண்டாகிய மேற்கருமம் அந்தக் காரியப்பேர்களாலே தீர்க்கப்பட்டாற் போல, கர்த்தாவும் எல்லாரும் பக்குவ ரல்லாதது கொண்டே அபக்குவராயுள்ளவர் வழிபாடு செய்யத்தக்கதாக அந்தத் தேவதைகளையுஞ் சொன்னதாயிருக்கும்; அன்றி இனையவை பிறரிற் கனவிலும் இலனே - இது ஒழிந்து பிற தெய்வங்களை அவன் நமஸ் கரித்துச் சொன்னா னென்கிறது அவனுக்குச் சொற்பனத்திலுங் கூட உண்டாகாது. உம்முடைய கர்த்தா தன்னைத்தானே தோத்திரம் பண்ணுவானே னென்னில்; தன்னைத் துதிக்குஞ் சொல் நலந்தானும் அத்துறை அறிவாணர்க்கு அறைவ தொன்று - கர்த்தா தன்னைத்தான் நன்றாகத் தோத்திரம் பண்ணுவானென்கிறதும் பக்குவான்மாக்களா யுள்ளவர்கள் தன்னை வழிபாடு செய்யத்தக்கதாகச்
1. அடிகள் - பாடபேதம். |