பக்கம் எண் :

1182சித்தாந்த சாத்திரம் - சங்கற்பநிராகரணம்

  தனக்குத் தானே நன்நலம் பகரா(து)
அசத்துக் குரையா தார்க்குரை உயிர்க்கெனில்
உரைபிர மாணம் இறைபிர மேயம்
நீபிர மாதா நின்பிர மிதியென
45 நால்வகை யுளதுன தேகம்நன் றன்றே
நற்பிர மாணம் நிற்பதொன் 1றாய்த்தன்(று)
அப்பிர மேயமும் அதன்இயல் பன்றே
கன்னற் சுவையில் அன்னியம் இலதால்
இனிமை தோன்றாத் 2தன்மைத் தென்றனை

சொன்னதாயிருக்கும்; அன்றியும் தனக்குத்தானே தன்நலம் பகராது
அசத்துக்கு உரையாது ஆர்க்கு உரை உயிர்க்கெனில் - இதுவன்றியும்
கர்த்தா தன்னுடைய பெருமையைச் சொல்லுமிடத்து வேறே ஒருத்தர் கேட்கச்
சொல்லுவ தொழிந்து தனக்குத்தான் தன்னுடைய பெருமையைச் சொல்லிக்
கொள்ளாது. பின்னைச் சரீரஞ் சடமானபடியாலே அந்தச் சரீரத்தை நோக்கிச்
சொல்லாது. பின்னை இவனுடைய பெருமையைச் சொன்னது ஆரை நோக்கி?
அது பிறரை நோக்கிச் சொன்னா னென்னில்; உரை பிரமாணம் இறை
பிரமேயம் நீ பிரமாதா நின்பிரமிதி என நால்வகை யுளது உனது. ஏகம்
நன்றன்றே - சாத்திரமாகிய பிரமாணம், கர்த்தாவாகிய பிரமேயம்,
ஆன்மாவாகிய பிரமாதா, ஆன்மாவின் அறிவாகிய பிரமிதி என்று நாலு
வகையாகக் காணப்பட்டது. ஆகையால் நீ ஒன்றென்றது நன்றா யிருந்தது;
நற்பிரமாணம் நிற்பதொன் றாய்த்தன்று - ஆகையால் நன்றாக இதற்குப்
பிரமாணமென்று நாட்டின வேதமும் ஒன்றென்று சொல்லி நிலை நிற்கப்
பட்டதில்லை; அப் பிரமேயமும் அதன் இயல்பன்றே - இந்தப்பிரமாணத்
தாலே அளவிடப்பட்டதாய் மேல் மறுக்கப்பட்டது போற் பிரமேயமும்
அந்தச் சாத்திரத்தினுடைய இயல்பாகப்படும். இது வேதஞ் சுயம்புவென்றதை
மறுத்தது.

     மேற் பிரமேயத்தை மறுக்கிறார் : கன்னற் சுவையில் அன்னிய மிலதால்
இனிமை தோன்றாத் தன்மைத்து என்றனை - கரும்பிலுண்டாகிய இரதம்
தன்னில் வேறுபாடில்லாதது கொண்டு தன்னுடைய இரதந் தனக்குத் தோன்றா
மலிருந்த தன்மை போலும் பிரமமும் தன்னுடைய இன்பத்தைத் தான்
அறியாதென்று நீ


     1. றன்றால்.
     2. தனிமைத் - பாடபேதம்.