பக்கம் எண் :

4. மாயாவாதி நிராகரணம்1183


50 அறிவிற் குவமை அசத்தாம் கட்டி
55 பிறவித் தொட்டினும் பேற துறாதே
தற்பர விரிவு பொற்பணி தகுமெனிற்
செய்வோ ரின்றிச் செய்வினை இன்மையிற்
பொன்பணி யாகை தன்பணி யன்றே
செய்வோர் போலாச் செயப்படு பொருள்முதற்

உன் மதத்திலே சொன்னாய்; அறிவிற்கு உவமை அசத்தாம் கட்டி பிறவித்து
ஒட்டினும் பேறது உறாதே - அறிவாயுள்ளதற்கு உவமை சொல்லுமிடத்து
அறிவாயுள்ளதைச் சொல்லாமற் சடமாயுள்ள கரும்பில் இரதம்போலுமென்று
சொன்னாய், அந்தத் தோஷமன்றியுங் கரும்பிலுண்டாகிய கட்டியைத்
தன்னிலே பிறித்து வைத்து மேல் ஓர் அவதரத்திலே கூட்டினவிடத்து
இத்தனை நாளும் இந்த இரதத்தை யிழந்தோமே இப்பொழுது இந்த
இரதத்தைப் பெற்றோமே என்கிற தன்மை இந்தக் கட்டிக்கு உண்டாகாது;
ஆகையால் இது பிரமத்துக்கு உவமையன்று, இதன்றியும்; தற்பர விரிவு
பொற்பணி தகுமெனில் - பரப்பிரமந் தேகாதிப் பிரபஞ்சமாகப் பலவாயிருந்த
தன்மை பொன்னானது பணி பலவாயிருந்த தன்மை போலுமென்று நீ
சொல்லில்; செய்வோரின்றிச் செய்வினை இன்மையின் பொன் பணியாகை
தன் பணியன்றே - இந்தப் பிரபஞ்சத்திலே செய்வோ ரொருவரையின்றிச்
செய்தொழிலானது காணப்படா தாற்போலப் பொன்னானதும் ஒருவன்
பண்ணப் பல பணியாயிருந்த தொழிந்து தானாகப் பல பணியாகாது. பிரமம்
பிரபஞ்சமாய் விரிந்ததும் வேறே யொருவனாலே செய்யப்பட்டதாக வேண்டும்.
அப்படியன்றுகாணும், எல்லாவற்றையுஞ்செய்தது பிரமந்தானேயென்னில்;
செய்வோர்போலாச் செயப்படுபொருள் முதல் - இந்த உலகத்திற்செய்கிறவர்
களைப்போலே யிராது இவர்களாற் செய்யப்படும் பொருள்களுக்கு
முதலாயுள்ள உபாதானமும். அதென்போல வென்னில், குலாலனைப்போல
யிராது சால் குடஞ் சட்டி பானைக்கு உபாதானமாகிய மண்ணும். ஆகையால்
இந்தப் பிரமத்தை யின்றிப் பிரபஞ்சத்துக்கு உபாதானம் வேறே யொன்று
உண்டாகவேண்டும். அப்படி ஓர் உபாதானமுண்டாகில் அதுவே அமையாதோ
இந்தப் பிரமம்