65 | சோம பானம் சுராபா னங்கள் ஆமென 1நூல்கள் ஆர்செவிப் பறைந்தன மறையோன் புலைச்சியை மருவும் என்பது முறையோ எனில்அது புனைமொழி யென்னில் சாதி பேத 2நீயினித் தவிரினும் மேதியை ஏறு விழையா விரும்பும் | | 70 | கண்ணின துருவும் அதிற்கதிர் ஒளியும் நண்ணரும் சத்தின் நாடகம் எனில்அதற் கேதுவும் பயனும் ஓத வேண்டும் | யிற்றைவிட்டுவிடுங்கோளென்றுசொல்லாமலிருப்பார்ஒருவருமில்லை. இப்படிக் கொத்தவை யெல்லாவற்றையுஞ் செய்தாலும் ஞானவான்களுக்குத் தோஷம் ஏறாதென்று சாத்திரஞ் சொல்லுமெனில்; சோமபானம் சுராபானங்கள் ஆம் என நூல்கள் ஆர் செவிப் பறைந்தன -சோமபானஞ் செய்கிறது சுராபானஞ் செய்கிறது இவை இரண்டுங் கொள்ளுகிறது ஆமென்று ஒருத்தரும் அறியாமல் நூல்களானது ஆருடைய செவியிலே சொல்லிவைத்துப் போயிற்று? இவை யிருக்க; மறையோன் புலைச்சியை மருவுமென்பது முறையோ வெனில் - பிராமணனாயுள்ளவன் பறைச்சிக்கு ஆசைப்பட்டு அவளைக் கிரீடிக்கிறது முறைமையோ முறைமைக்கீனமோ வென்று நான்கேட்க; அது புனைமொழி யென்னில் - பிராமணன் பறைச்சியைப் பரிசிக்கலாகாதென்று சொல்லுகிறது ஒரு வரம்புகட்டிச் சொன்ன தொழிந்து பிராமணன் பறைச்சியோடுங் கூடினால் அவளிடத்திலே இவனுக்கு இன்பம் விளைந்ததில்லையோ என்று நீ சொல்லில்; சாதிபேதம் நீ இனித்தவறினும் மேதியை ஏறுவிழையா - பிராமணனென்றுஞ் சண்டாளனென்றும் இத்தனை காலமும் வழங்கிவந்த சாதித்தன்மையை நீ தவிர்ந்துவிட்டாயாயினும் எருமையை இடபமானது விஷயமாக விரும்பாது, ஆகையால் ஞானவான்களுக்குஎல்லாம் ஆம் என்கிறது அர்த்தமாகாது; விரும்புங் கண்ணினது உருவும் அதிற் கதி ரொளியும் நண்ணருஞ் சத்தின் நாடகமெனில்-நீவிரும்பப்பட்ட கண்ணினு டையவடிவம் அதிலுண்டாகிய ஆதித்தனுடையகாட்சியும் மனதினாற் கிட்ட வொண்ணாதிருக்கிற சத்தாகிய சிவத்தினுடைய நடிப்பாயிருக்குமென்று நீ சொல்லில் ; அதற்கு ஏதுவும் பயனும் ஓத
1. மறைகள் 2. நீதிநீ - பாடபேதம். |