| 55 | பொற்பணி யாவும் பொன்னாந் தன்மையின் நிட்கள சகளத் திருவுரு நிலையும் ஈச னேஎனப் பேசுவர் அன்றி அருஉரு வாகி வரும்உல கென்னில் அனைத்தும் மாயை எனத்தெளி கிலையே | | 60 | ஆவதும் ஆகா தொழிவதும் இலதெனும் பாவகம் உலகா யதனது பான்மை கட்கொலை வெகுளி காமம் களவுகள் உட்படும் இவைவிட மொழியா தார்இலர் | அதை மாயா மயக்கினுடைய பெருமையென்று அறிவாயாக; பொற்பணி யாவும் பொன்னாந் தன்மையின் நிட்களசகளத் திருவுரு நிலையும் ஈசனே எனப் பேசுவர் - பொன்னிலேநின்றும் உண்டாகப்பட்ட பணிகளெல்லாம் அந்தப் பொன்னையின்றி வேறொரு முதலாயிராமல் அந்தப் பொன்னேயா யிருந்த தன்மைபோல, அந்த மா அரூபமாயுள்ள நிட்களமும் அந்த நிட்களத் திலேநின்றுந் தோன்றின சகளமாகிய இச்சா ஞானக் கிரியா சொரூபமும் இவை யிரண்டுஞ் சிவனுடைய சொரூபமாயிருக்குமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள்; அன்றி அரு உருவாகிவரும் உலகு என்னில் - அதன்றி அருவாயுள்ள சிவம் உருவாயுள்ள பிரபஞ்சமா யிருக்குமென்று நீ சொல்லில்; அனைத்தும் மாயையெனத் தெளிகிலையே-பிரபஞ்சம் மாயையா யிருக்கையால் இந்தப் பிரபஞ்சத்துக்கு உபாதானமாயிருக்குமென்ற சிவமும் மாயையென்று தெளிகிறாயில்லை. எனவே, பிரபஞ்சத்துக்கு உபாதானம் சிவமல்ல மாயை யென்பது கருத்து. இதன்றியும்; ஆவதும் ஆகாது ஒழிவதும் இலதெனும் பாவகம் உலகாயதனது பான்மை - இது ஆம்பகுதி இது ஆகாப்பகுதி இவை யிரண்டுமில்லை என்கிற பாவகம் சைவராயுள்ளவர்கள் கொள்ளும் பகுதியல்ல, உலகாயதனுடைய பக்ஷமாயிருக்கும். ஞானவான்களுக்கு ஒன்று மில்லை யென்னில்; கள் கொலை வெகுளி காமம் களவுகள் உட்படும் இவைவிட மொழியாதார் இலர் - மதுபானஞ் செய்கிறது, கொன்று பறிக்கிறது, கோபித்துச் சொல்லுகிறது, பரதாரகமனஞ் செய்கிறது, பிறருடைய சொத்தைக் களவு காண்கிறது, இப்படி இன்னுஞ் சொல்லப்பட்ட பொல்லாங்குக ளெல்லா வற்றையும் ஆகாது இவை |