| | எவ்வகை யேனுஞ் செய்கைஇன் றாதலும் பலகலை உலகில் நிலவுத லானும் எண்ணரும் பொருளும் இரவியும் ஒழியக் | | 50 | கண்ணென ஒன்று காண்கையி னாலும் பாசப் பகுதியும் ஈசனும் ஒழியப் பசுவும் உண்டென் றிசையவேண் டின்றே இதுவெனும் ஒன்றை அதுவாய்ப் படுத்து பொதுமையில் நிற்கும் மாயையின் பொற்பெனப் | வாக்குமனாதீதனா யிருக்கிற சிவனும் கன்மத்துக் கீடாக ஓர் உடலினிடத்து வந்து பொருந்துதல், பிராரத்தம் பொசித்துத் தொலைந்த வாறே அந்த உடலை விட்டு விடுதல், இந்த உடலோடுங் கூடிநின்று புண்ணிய பாவங் களைப் பொசித்துக் கொண்டு வருதல், சாக்கிராதியாயுள்ள அவத்தைகளிலே இறங்கி யதீதப்பட்டுக் கிடத்தல், மீளவும் உணர்த்து முறைமையினாலே ஏறிச் சாக்கிரத்தானத்திலே வருதல் இவையெல்லாம் எந்தப் பிரகாரத்திலுங் கடவுளுக்கில்லாத படியாலும்; பலகலை உலகில் நிலவுதலானும் - கடவுள் சர்வஞ்ஞனான படியாலே அவனுக்கு வேண்டுவதில்லை, பாசஞ் சடமான படியாலே அதற்கும் வேண்டுவதில்லை, இந்த இரண்டு வகைக்குமின்றிப் பலவகையாகச் சொல்லப்பட்டிருக்கிற சாத்திரங்கள் இந்தப் பிரபஞ்சத்திலே பொருந்தி வருகையினாலும்; எண்ணரும் பொருளும் இரவியும் ஒழியக் கண்ணென ஒன்று காண்கையினாலும் - எண்ணிறந்த பொருள்களாயிருக்கிற பிரபஞ்சப் பதார்த்தங்களும், இவையிற்றையெல்லாம் விளக்கஞ் செய்துகொண்டு நிற்கிற ஆதித்தனும் இவையிரண்டையு மின்றிக் கண் என்று ஒருமுதல் நடுவே நின்று கண்டு வருகையினாலும்; பாசப் பகுதியும் ஈசனும் ஒழியப் பசுவும் உண்டென்று இசைய வேண்டின்றே - பாசத்தினுடைய பகுதியும் பதியினுடைய பகுதியும் இரண்டு மொதியப் பசுவினுடைய பகுதியும் உண்டென்று நீ பொருந்த வேண்டும்; இதுவெனும் ஒன்றை அதுவாய்ப்படுத்து அது பொதுமையில் நிற்கும் மாயையின் பொற்பு என - இதுவென்று சுட்டப்பட்டதொரு விஷயத்தை யனுபவிக்குமிடத்து அந்த விஷயந்தானேயாய் அந்த அறிவானது பொதுவிலே நிற்குமென்னும் |