| 40 | ஒன்றே ஆகில் உடற்கிறை தாபரத்து ஒன்றிய நிலையில் விசேடமென் உரைக்க பூதச் சேர்வைப் பேதமென் றறையிற் சேர்வைப் பேதம் என்கொடு செப்புக | 45 | கருமத் தளவில் வரும்எனிற் பித்தர் உரையில் திகழும் உணர்வொழிந் தனையே கருமஞ் செய்வோன் கடவுளன் றுடலும் மருவிநின் றிருவினை வாளா நுகரா கடவுளும் உடலின் கண்படல் துஞ்சல் இடர்நலம் உறுதல் இறங்குதல் ஏறுதல் | உண்டாகாது; ஒன்றேயாகில் உடற்கு இறை தாபரத்து ஒன்றிய நிலையில் விசேடம் என் உரைக்க - நீ சொன்னாற்போலே பசுமுதலின்றிப் பதிமுதல் ஒன்றுமேயாக அந்தப் பதி முதல் எங்கும் ஒத்துநிற்கச்செய்தே தாபரங்களைப் பார்க்க இந்த உடலுக்கு விசேஷமுண்டானது ஏதென்று சொல்லுவாயாக; பூதச்சேர்வைப் பேதமென்று அறையில்-பூதங்கள் உரூபங்களாகக் கூடுகிற கூட்டத்தில் உண்டாகிய பேதங்கள் கொண்டு இருக்கும் இந்த உடலுக்கு விசேஷமுண்டான தென்று நீ சொல்லில்; சேர்வைப் பேதம் என்கொடு செப்புக - பூதங்கள் கூடுகிற இடத்திலே பேதந்தான் வந்தது ஏதுகொண் டென்று நீ சொல்லுவாயாக; கருமத்தளவில் வருமெனில் - கன்மத்தைச் செய்தபடியினாலே அந்தக் கன்மத்துக்கீடாக விசேஷமும் விசேஷ ஹீனமும் உண்டானதென்று நீ சொல்லில்; பித்தர் உரையில் திகழும் உணர்வு ஒழிந்தனையே - நீ கன்மத்துக்கீடாக வருமென்றது பித்தர் சொல்லுஞ் சொல்லுப்போல விளங்காநின்றது. நீயும் அறிவு கெட்டவனாயிருந்தாய்; கருமஞ் செய்வோன் கடவுளன்று - யாதொரு கருமத்தைச் செய்து வருகிறவனைக் கர்த்தாவென்று சொல்லப்படாது, ஆகையால் இந்தக் கன்மஞ் செய்தது சிவமல்ல; உடலும் மருவி நின்று இருவினை வாளா நுகரா - இந்த உடலுஞ் சடமாயிருந்தபடியாலே ஓர் ஏதுவின்றிப் பிராரத்த கன்மத்தைத் தானாகப் பொசிக்க மாட்டாது. சிவன் கூடிநின்று பொசித்தானென்னில்; கடவுளும் உடலின்கண் படல் துஞ்சல் இடர் நலம் உறுதல் இறங்குதல் ஏறுதல் எவ்வகையேனுஞ் செய்கை இன்றாதலும் |