| 30 | ஈண்டுன துரைக்குமற் றியார்கரி உடலும் சித்தோ சித்தின் சேர்வாற் சித்தெனில் கடப டாதியும் உடற்கட் சிதைவென் | 35 | தாவர உயிர்போல் தனுஒழிந் தவற்றுள் மேவிய உணர்வு விரவிடும் என்னிற் சடத்துயிர் போலெனச் சாற்றினை ஆகலின் உடற்குயிர் இறையை ஒழிந்துண் டன்றே தருதிட் டாந்தமுந் தாட்டாந் திகமும் ஒருபொரு ளாகில் உவமை பெறாதே | இல்லை; ஈண்டு உனது உரைக்கு மற்று யார் கரி - இவ்விடத்து நீ ஆன்மா இல்லையென்று சொல்லுகிற இதற்கு ஆர் சாட்சி? இன்னார்சாட்சி யென்று ஒருவரைக் காட்டு. இதன்றியும்; உடலும் சித்தோ இந்தச் சரீரமும் அறிவோ சித்தின் சேர்வாற் சித்தெனில் - அறிவோடுங் கூடி வாதனைப்பட்டு வருகையினாலே இந்த உடலும் அறிவென்று நீ சொல்லில்; கடபடாதியும் உடற்கண் சிதைவு என் - சால் குடஞ் சட்டி யாதியா யுள்ளவையும் புடைவை சீலையாதியாயுள்ளவையும் இந்த உடலைப்போல அவையும் ஓர் உடல்களா யிருக்கச்செய்தே இந்த உடலைப்போலே சஞ்சாரமின்றிக்கிடப்பானேன் ; தாவர உயிர்போல் தனு ஒழிந்தவற்றுள் மேவிய உணர்வு விரவிடும் என்னில் - இந்த உடலிலே பொருந்திநிற்கிற பேரறிவு எல்லா உரூபங்களிலுங் கலந்து கொண்டு நிற்கும்படி நிற்கச் செய்தேயும் இந்த உயிர்கூட நிற்கிற உடம்பிலே தாக்கி நிற்கிறாப் போல மற்றுள்ள உரூபங்களிடத்திலே தாக்கி நில்லாதென்று நீ சொல்லில்; சடத்து உயிர்போலெனச் சாற்றினையாகலின் உடற்கு உயிர் இறையை ஒழிந்துண்டன்றே - உயிர் நிற்கிற உடம்புபோல உயிரில்லாத உடம்புகளில் அந்தப் பேரறிவு பொருந்தாதென்று நீ சொன்னாயாகையால், இந்த உடலுக்குக் கர்த்தாவை யொழிந்து ஓர் உயிர் உண்டாகவேணும். நான் திட்டாந்தஞ் சொன்னது கொண்டு ஏன் அப்படிச் சொல்லுகிறீரென்று நீ சொல்லில்; தரு திட்டாந்தமுந் தாட்டாந்திகமும் ஒரு பொருளாகில் உவமை பெறாதே - ஒன்றுக்கு உவமையாகச் சொல்லப்பட்ட திட்டாந்தமும் அந்த உவமைபற்றி நின்ற தாட்டாந்தமும் ஒரு பொருளா யிருக்குமாயின் பொன்போலுங் கொன்றை என்கிற உவமை இந்த உலகத்தின்கண் |