பக்கம் எண் :

11. சிவசமவாதி சங்கற்பம்1257


20 நின்சித் தாந்தம் அவசித் தாந்தம்
என்சித் தான்ற வசித்தைமற் றீனாது
அசித்தில தென்னில் வசித்ததென் உலகில்
உலகா யதனும் பூதக் கூட்டஞ்
சலமேற் கொப்புள் தகுமெனச் சாற்றினன்
25 தீய கருமச் சீனர்சா வகர்பிறர்
நேயம் இல்லென நிகழ்த்தினர் இலரே
காண்டல் விரோத நிற்பிறர் 1கதித்திலர்

நின்றும் பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்கிற சிவனோடுங்கூட இந்த ஐந்து
வகைக்கும் மாறுபாடாகச் சைவராயுள்ளவர்கள் சொல்லார்கள்; என்றால்
நின் சித்தாந்தம் அவசித்தாந்தம் என்-என்று இப்படி யிருக்கையால் நீ
கொண்டிருக்கிற சித்தாந்தம் சித்தாந்த மல்லவென்று நீதானே சொல்லு.
இதன்றியும்; சித்து ஆன்ற அசித்தை மற்று ஈனாது - பிரபஞ்சமெல்லாஞ்
சிவனிடத்திலே தோன்றுமென்றாய், சித்தாயுள்ள சிவம் அசித்தாயுள்ள
பிரபஞ்சத்தைத் தன்னிடத்திலே நின்றுந் தோற்றுவியாது; அசித்து இலது
என்னில் - அசித்தென்கிற வசனம் பிரபஞ்சத்துக்கில்லைக் காணும், எல்லாஞ்
சிற்சொரூபந் தானே யென்னில்; வசித்தது என் உலகில் - இந்த உலகத்தின்
கண்ணே பிரபஞ்சம் சடமாயிருப்ப தொன்றென்று சாத்திரங்கள்
சொல்லுவானேன்? இதன்றியும்; உலகாயதனும் பூதக்கூட்டஞ் சலமேற்
கொப்புள் தகுமெனச் சாற்றினன்-உலகாயதன் அளவாகப் பூதக்கூட்டமா
யிருக்கிற தேகாதிப் பிரபஞ்சத்தை நீர்க்குமிழிபோல நிலைநிற்பதொன்
றல்லவென்று சொன்னான்; அப்படி யிருக்கச் செய்தே நீ இந்தப்
பிரபஞ்சத்தைச் சிற்சொரூபமென்று சொன்னது அர்த்தமன்று.

     மேல் அவன் ஆன்மா இல்லையென்ன உண்டென்று மறுக்கிறான்: தீய
கருமச் சீனர் சாவகர் பிறர்நேயம் இல்லென நிகழ்த்தினர்இலரேபொல்லாத்
தொழிலுக்கு ஏதுவாயிருக்கிறபுத்தர்கள் சமணர்கள்மற்று முண்டான சமயிகள்
இவர்கள் அனைவரும் இந்தச் சரீரத்திலே ஓர் அறிவு உண்டென்று
சொல்லுவார்கள்; அத்தனையொழிந்து உன்னைப்போலே ஆன்மா இல்லை
யென்று சொல்லுவார் இல்லை; காண்டல் விரோதம் நிற்பிறர் கதித்திலர் -
பிரத்தியக்ஷ விரோதம் நீ நாட்டினாற் போலப் புறச்சமயத்தி லுள்ளவர்களும்
இப்படிச் சொன்னவர்கள்


     1. கணித்திலர் - பாடபேதம்.