| | வீண்எனிற் பித்தர் 1மாணுறு தொழில்போல் தலைமையும் அறிவும் இலதென இகழ்வர் தனக்கெனில் அஃதும் இசைப்பதொன் றன்றே தன்போல் அறிஞருந் தலைவரும் இலரால் | | 15 | மின்போல் நிலைமையை வேண்டலும் பழுதே பிறர்க்கெனிற் பிறரும் பிறர்க்காம் பொருளும் பொருட்கமை கருவியும் அதற்குபா தானமும் செய்கையும் என்றோர் ஐவகைத் தானொடு மாறாச் சைவர் கூறார் என்றால் | சொல்லுவாயாக. சொல்லமாட்டாயாகில் நான் சொல்லக் கேட்பாயாக; வீண் எனில் பித்தர் மாணுறு தொழில்போல் தலைமையும் அறிவும் இலதென இகழ்வர் - சும்மா பயனற்றதாகச் செய்தானாமாகிற் பித்தராயுள்ளவர்கள் மாட்சிமைப்படச் செய்த தொழிலினைப்போல இருக்கையாற் கர்த்தாவுக்குச் சர்வ முதன்மையும் சர்வஞ்ஞத்துவமுமில்லை யென்று சொல்லிப் பெரியோர்கள் இகழாநிற்பர்கள். ஆகையால் வீணாகச் செய்தானென்று சொல்ல வொண்ணாது; தனக்கெனில் அஃதும் இசைப்பதொன் றன்றே - கர்த்தா தன் நிமித்தமாகச் செய்தா னென்னில் அதுவும் முன் சொன்னது போல பொருந்துவ தொன்றன்று. அதேதென்னில்; தன்போல் அறிஞருந் தலைவரும் இலரால் மின்போல் நிலைமையை வேண்டலும் பழுதே - தன்னைப் போலச் சர்வஞ்ஞத்துவமுஞ் சர்வ முதன்மையும் பிறரொருவர்க்கு இல்லாதபடியாலே இவன் மின்போலுந் தோன்றி மறைந்து போகிற பிரபஞ்ச இயற்கையை வேண்டிச் செய்தா னென்னும் அது மிகவும் பழுதாம். ஆகையால் தன் நிமித்தமாகச் செய்தா னென்று சொல்லவு மொண்ணாது; பிறர்க்கெனில் பிறரும் பிறர்க்காம் பொருளும் பொருட்கு அமை கருவியும் அதற்கு உபாதானமும் செய்கையும் என்று ஓர் ஐவகைத்தானொடு மாறாச் சைவர் கூறார் - இந்தத் தொழில் கர்த்தா பிறர் நிமித்தமாகச் செய்தா னென்னில் தன்னையொழிந்து பிறரென்று ஒரு முதலும், அந்தப் பிறரென்று சொல்லப்பட்டவர்களுக்கு வேண்டின விஷயமும், அந்த விஷயங்களைப் பிறர் பொசிக்கத்தக்கதாக அதற்கேற்ற கருவிகளும், அந்த இந்திரியங்கள் தோன்றுதற்கு ஓர் உபாதனமும், அந்த உபாதானத்திலே
1. மாண்பறுந் - பாடபேதம். |