பக்கம் எண் :

11. சிவசமவாதி சங்கற்பம்1255


5 அவன்முதற் காரணம் அன்றாம் என்னில்
நிமித்த காரணம் 1இனிநிகழ்த் தெனநீ
அவனே காரணம் அனைத்துமென் றறைந்தனை
10 மண்தனிக் குலாலன் தண்டசக் கராதி
காரணம் மூன்றும் ஓர்பே ரணைந்ததித்
தாரணி அதனிற் கண்டது சாற்றுக
அத்தன் இயற்றும் இத்தொழில் பிறர்க்கோ
தனக்கோ வீணோ எனக்கீ தியம்புக

விசாரிக்குமிடத்தில் எப்படியிருந்தது; ஏன், இதற்குக் குற்றமென்னை; புவனம்
யாவையும் புனிதனது உருவெனில் - இந்தப் பிரபஞ்சமாகக் காணப்பட்டி
ருக்கிற உலகங்களெல்லாம் சுத்தனாயுள்ள சிவனுடைய சொரூபமென்று
சொல்லில்; அவன் முதற் காரணம் விசுவாதீதனாயுள்ள அந்தச் சிவன் முதற்
காரணமாக வேண்டும்; அன்றாமென்னில் - அவன் முதற்காரணமல்லவென்று
நீ சொல்லின்; நிமித்த காரணம் இனி நிகழ்த்தென நீ அவனே காரண
மனைத்தும் என்று அறைந்தனை - அவனை நிமித்த காரணமென்று
சொல்லென்று நான் சொல்ல நீ பின்னையும் அந்த விசுவாதீதனாயுள்ள சிவன்
தானே நிமித்தகாரணமும் துணைக்காரணமும் முதற்காரணமு மெல்லாமென்று
சொன்னாய்; மண் தனிக் குலாலன் தண்டசக்கராதிகாரண மூன்றும் ஓர் பேர்
அணைந்தது இத் தாரணியதனிற் கண்டது சாற்றுக - மண்ணாகிய முதற்
காரணமும் ஒப்பில்லாத குயவனாகிய நிமித்தகாரணமும் அவனுக்குக்கருவி
யென்றுசொல்லப்பட்ட தண்டசக்கராதியுள்ள துணைக்காரணமும்இவை
மூன்றும்மூன்று காரணமாயிருப்ப தொழிந்து மூன்று காரணமும் ஒருகாரணமா
யிருக்கிறது இந்தப் பூமியினிடத்துக்கண்டதுன்டாகிற் சொல்லுவாயாக. நிமித்த
காரணமென்றது சிவனை, துணைக்காரண மென்றது சத்திகளை, முதற்காரண
மென்றது விந்து மோகினி மான் என்கிற உபாதானங்களை. இதன்றியும்;
அத்தன் இயற்றும் இத்தொழில் பிறர்க்கோ தனக்கோவீணோ எனக்கு ஈது
இயம்புக - கர்த்தா செய்கிற இந்தப் பஞ்சகிருத்தியம் பிறர் நிமித்தமாகச்
செய்து வருகிறானோ, அல்லது தன் நிமித்தமாகச் செய்து வருகிறானோ
இவை யிரண்டுமன்றிச் சும்மா பயனற்றதாகச் செய்து வருகிறானோ இதை
எனக்குத் தெரியச்


     1. நிகழ்த்துக எனநீ - பாடபேதம்.