| | சாக்கிரம் கனவு நீக்கமில் சுழுனை துரியம் என்றிவை பயில்தரும் அறிவு துரியா தீதம் திரியாத் தன்மையில் | | 100 | இறையருள் உதவும் கறையற மாறி அறிவே யாகும் பிறியாக் கருவிகள் நிறைமுதல் அவத்தையில் அறிவில தாகத் துரியா தீதந் தோற்றத் திரியா ததுநற் சிவகதித் திறனே. 17 | 18. நிமித்தகாரண பரிணாமவாதி நிராகரணம் திறம்பெற நீஇங் கறைந்தமை கருதில் புவனம் யாவையும் புனிதன துருஎனில் | அறிவு - சாக்கிரஞ் சொற்பனம் சுழுத்தி துரியமென்று சொல்லப்பட்ட நாலு அவதரத்திலும் அறிகிற அறிவுகருவிகள் அந்த அவத்தைகள்தோறும் ஏற்றக் குறைச்சல்களாகநின்று அறிகிறதாயிருக்கும். ஆகையால் இந்தக் கருவிக ளெல்லாங் கழன்று ஒன்றும் அறியாமற்கிடக்கிற அவதரம் துரியாதீதம். இது கேவலம். துரியாதீதம் திரியாத் தன்மையில் இறையருள் உதவுங் கறையற மாறி அறிவேயாகும் - இந்தத் துரியாதீதமாயிருக்கிற ஐஞ்சாம் அவத்தை இவனை விட்டு நீங்காமல் நிற்கிற அவதரத்திலே கர்த்தாவினுடைய திருவருளானது கருவிகளைக் கூட்டி இவனுடைய போதத்தைச் சீவிக்கப்பண்ணும் பொழுது ஆணவமலமானது நீங்கிக் கருவிகளோடுங் கூடி அறிவாக நிற்கும். இது சகலம். மேல் சுத்தாவத்தை : பிரியாக் கருவிகள் நிறை முதல் அவத்தையில் அறிவிலதாகத் துரியாதீதந் தோற்றத் திரியாதது நற்சிவகதித்திறனே-இவனை விட்டு நீங்காமல் நிற்கிற கருவிகள் முப்பத்தாறும் நிறைந்து நிற்கிற சாக்கிராவத்தையிலே எல்லாக் கருவிகளுங் கழன்றிருக்கிற துரியாதீதம் தோன்றினவிடத்து அந்த அவதரம் நீங்காமல் நிலைபெற்றிருக்கிறது சிவனுடைய பகுதி. 17 மேல் அவனைச் சைவன் மறுக்கிறான் : (உரை) திறம்பெற நீ இங்கு அறைந்தமை கருதில் - நீ நன்றாகக் கொண்டு இவ்விடத்து உன் பெத்த முத்திகள் சொன்னவற்றை |