90 | நான்அவன் எனும்இது நவைவழி நல்வழி தான் அவன் ஆகை இதுசா யுச்சியம் இத்திறன் தெளிய உய்த்திடு மளவும் யாதொரு வகையால் நீதிய தாகத் தான்அறி வழியே தலைநின் றென்றும் ஊன்உயிர் சிவத்தில் ஒடுங்கிட நடத்தி | | 95 | மூடு முழுமலம் வீடுங் காலைக் கருவிகள் அளவில் புரிதரும் அறிவு | இது இவனாற் பொசிக்கப்பட்டிருக்கிற சத்தாதி விஷயங்களும் சைதன்னியம், அந்த விஷயங்களைப் பொசிக்கிற இவனும் சைதன்னியன், இவையிரண்டும் வேறல்லவென்று மாறுபாடற அறிகிற அறிவு ஒருவனுக்குண்டாகிறது மிகவும் அரிது. இது பெத்தம். மேல் அவனது முத்தி : நான் அவன் எனும் இது நவைவழி நல்வழி தான் அவன் ஆகை இது சாயுச்சியம் - ஆன்மாவும் தனியே ஒருமுதல் சிவமும் தனியே ஒரு முதல் என்று இங்ஙனஞ் சங்கற்பித்துக்கொண்டு நிற்கிறது குற்றத்தை யுடைத்தாகிய வழியாயிருக்கும், நல்வழியாகச் சொல்லப் படுவதுதான் ஒருமுதலறச் சிவமுதலேயாய் நின்று வருகை, சாயுச்சியமென்று சொல்லுவது இப்படிச் சரித்துக்கொண்டு வருகிறதாக இருக்கும்; இத்திறன் தெளிய உய்த்திடுமளவும் - இப்படி நான் சொன்ன உண்மை இவனுக்கு அறுதிவரத்தக்கதாக இவன் போதஞ் செலுத்துமளவும்; யாதொரு வகையால் நீதியதாகத் தான் அறி வழியே தலைநின்று-மக்கள் ஒக்கல் சம்சாரத்தோடுங் கூடியிருப்பனாகிலும், அவையிற்றை விட்டுத் தான் அறிவனாகிலும் தான் நின்றது நீதியாகக்கொண்டு இது நமக்கு முத்திக்கு வழியென்று தன்னுடைய போதத்துக்குத் தோன்றின வழியிலே தலைநின்றுகொண்டு; என்றும் ஊன் உயிர் சிவத்தில் ஒடுங்கிட நடத்தி - நனவிலுங் கனவிலும் இந்த உடம்பையும் உயிரையும் சிவத்துக்குள்ளே ஒடுங்கத்தக்கதாக இவையிற்றினுடைய தோற்றமற நடத்திக்கொண்டு வரக்கடவன்; மூடு முழுமலம் வீடுங்காலை - இதனாலே ஒன்றையும் அறியவொட்டாமற் பொதிந்துகொண்டு நின்ற ஆணவ மலமானது நீங்கின அவதரத்து; கருவிக ளளவிற் புரிதரும் அறிவு சாக்கிரங் கனவு நீக்கமில் சுழுனை துரியமென்று இவை பயில்தரும் |