| | தாய்தலைப் பட்டங் கொன்றாய்த் தென்றும் ஏத மறநான் கெட்டேன் என்றும் இன்னும் இன்னும் இறையோர் அளித்தவை பன்னில் எண்ணரும் பான்மைத் தாதலின் | | 85 | தருபொருள் கொள்பொருள் தருவோன் கொள்வோன் ஒருபொருள் இவ்வியல் உவப்பென உணர்க நுகர்பொருள் சத்திது நுகர்வோன் சத்தன்என்று இகலறும் உணர்வுவந் தெய்துதல் அரிதே | தானே அறிவிப்பான் தானே, அறிவாய் அறிகின்றான் தானே அறிகின்ற, மெய்பொருளுந் தானே விரிசுடர்பா ராகாச, மப்பொருளுந் தானே யவன்ழு என்றும்; தாய்தலைப்பட்டங் கொன்றாய்த்து என்றும் - [கருவூர்த்தேவர்] திருவிசைப்பா 'மோதலைப்பட்ட கடல்வயி னுதித்த முழுமணித் தரளம தாங்கே, தாதலைப் பட்டங்குருகியொன் றான தன்மையி னென்னைமுன் னீன்ற, நீதலைப்பட்டால் யானுமவ் வகையே நிசிசர ரிருவரோ டொருவர், காதலிற்பட்ட கருணையாய் கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே' என்றும்; ஏதமற நான்கெட்டேன் என்றும் - திருவாசகம் 'வான்கெட்டுமாருத மாய்ந் தழல்நீர் மண்கெடினுந், தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக், கூன்கெட்டு டுயிர்கெட் டுணர்வுகெட்டென்னுள்ளமும்போய், நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ' என்றும்; இன்னும் இன்னும் இறையோர் அளித்தவை பன்னில் எண்ணரும் பான்மைத்து - முதலே சொல்லி வந்த திருவாக்குக்களன்றி இன்னமும் மேலும் அனுக்கிரகம் பெற்ற அடியார்கள் அருளிச்செய்த செயல்களைச் சொல்லு மிடத்து எண்ணிறந்த பகுதியை யுடைத்து; ஆதலின் தருபொருள் கொள் பொருள் தருவோன் கொள்வோன் ஒரு பொருள் இவ்வியல் உவப்பென உணர்க - ஆகையால் ஒருவன் ஒருத்தனுக்குக் கொடுக்கிற பொருள், தான் கொள்ளுகிற பொருள், ஒரு பொருளைக் கொடுக்கிறவர்கள், அந்தப் பொருளைக்கொள்ளுகிறவர்கள் அவையெல்லாம் ஒரு பொருளாயிருக்கும். அந்த முறைமையுள்ளதாகிய அர்த்த மென்றறிந்து பிரியப்படுவாயாக. ஆகையால்; நுகர்பொருள்சத்து இது நுகர்வோன் சத்தன் என்று இகலறும் உணர்வுவந்து எய்துதல் அரிதே - |