| 75 | தாமே தானாச் செய்தனன் என்றும் நாமே சிவமாய் நண்ணினம் என்றும் காயாய்ப் பழமாய்ச் சுவையாய் நுகர்வும் | | 80 | ஓயா துண்போன் தானே என்றும் அறிவோன் தானும் அறிவிப் போனும் அறிவாய் அறிகின் றோனும் அறிவுறு மெய்ப்பொருள் தானும் வியந்திது வெனப்படும் அப்பொருள் யாவும் அவனே என்றும் | மிக்க, உருவேயென் னுள்ளுறவே ஊனே ஊனி னுள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்ற, கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற் கருமணியே மணியாடு பாவாய் காவாய், அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம் ஆவடு தண்டுறையுறையும் அமர ரேறே' என்றும்; தாமே தானாச் செய்தனன் என்றும் - [சம்பந்தர் தேவாரம்] 'பத்திப்பேர் வித்திட்டுப் பரந்தவைம் புலன்கள்வாய்ப் - பாலேபோகா மேகாவாய் பகையறும் வகைநினையா, முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக்கு ணங்கள்வாய் மூடாவூடா நாலந்தக் கரணமு மொரு நெறியாய்ச், சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள் சேர்வார்தாமே தாமாகச் செயுமவ னுறையுமிடங், கத்திட்டோர் சட்டத்தங் கலந்திலங்கு நற்பொருள் காலேயோவா தார்மேவுங் கழுமலவளநகரே' என்றும்; நாமே சிவமாய் நண்ணினமென்றும்-[திருவாசகம்] 'அவமாய தேவ ரவகதியி லழுந்தாமே, பவமாயங் காத்தென்னையாண்டுகொண்ட பரஞ்சோதி, நவமாய செஞ்சுடர் நல்கும் பண்டை நாமொழிந்து, சிவமாய வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ' என்றும்; காயாய்ப்பழமாய்ச் சுவையாய் நுகர்வு மோயா துண்போன்றானேயென்றும், திருப்பாட்டு 'தீயாகி நீராகித் திண்மையாகித் திசையாகி அத்திசைக்கோர் தெய்வமாகித், தாயாகித் தந்தையாய்ச் சார்வுமாகித் தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக், காயாகிப் பழமாகிப் பழத்தினின்ற இரதங்கள் நுகர்வானுந் தானே யாகி, நீயாகி நானாகி நேர்மையாகி நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறேழு என்றும்; அறிவோன்தானும் அறிவிப்போனும் அறிவாய் அறிகின்றோனும் அறிவுறு மெய்ப்பொருள்தானும் வியந்திது எனப்படும் அப்பொருள் யாவும் அவனே என்றும்-[அற்புதத்திரு அந்தாதி] 'அறிவானுந் |