| 65 | இன்மை மின்மினி யெனஇரு கண்மணித் தன்மை தானுந் தாவில ததனால் கண்ணின துருவும் அதிற்கதிர் ஒளியும் நண்ணருஞ் சத்தி சத்தர்கள் நடிப்பே உலகேழ் எனத்திசை பத்தென ஒருவன் | | 70 | பலவாய் நின்ற படிஇது என்றும் ஊனாய் உயிராய் உணர்வாய் என்றும் மானக் கண்ணே மணியே என்றும் | தெரித்தலும் இன்மை-கண் ஒன்றைக்கண்டு வருகிற காட்சி அந்தக் கண்ணுக்கு உள்ளதாமாயின் அப்படிக்காண்கிற கண் நெருங்கியிருக்கிற இருளுக்குள்ளே பொருந்தியிருக்கிற பண்டங்களில் இது இன்னபண்டமென்று ஒன்றைக்காணும் பகுதி கண்டோமில்லையே. இதன்றியும்; மின்மினியென இருகண்மணித் தன்மை தானுந் தாவிலது-ஒரு மின்மினி இருளை நீக்கின மரியாதி இரண்டு கண்ணின் மணியுங்கூடி இருளை நீக்கக் கண்டோமில்லையே; அதனாற் கண்ணினது உருவும் அதிற் கதிரொளியும் நண்ணருஞ் சத்தி சத்தர்கள் நடிப்பே - ஆகையால் கண்ணினுடைய வடிவும் அதனிடத்து ஆதித்தப் பிரகாசத்தால் உண்டாகிய காட்சியும் இவையெல்லாம் மனதினால் எட்டுதற்காரிய சிவம் சத்திகளுடைய நாடகமென்று அறிவாயாக. இது எங்கே காணப்பட்டதென்னில்; உலகு ஏழ் எனத்திசை பத்தென ஒருவன் பலவாய் நின்றபடி இதுவென்றும் - திருவாசகம் 'நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன், புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்துநின்றான், உலகேழெனத்திசை பத்தெனத்தானொருத் தனுமே, பலவாகி நின்றவா தோணோக்க மாடாமோ' என்றும்; ஊனாயுயிரா யுணர்வா யென்றும் - [அப்பர்] திருப்பாட்டு 'ஊனாகி உயிராகி யதனுள் நின்ற உணர்வாகிப் பிறவனைத்தும் நீயே ஆனாய், நானேது மறியாதே யென்னுள் வந்து நல்லனவுந் தீயனவுங் காட்டா நின்றாய், தேனாருங் கொன்றையனே நின்றி யூராய் திருவானைக் காவிலுறை சிவனே ஞான, மானாய்நின் பொற்பாத மடையப் பெற்றால் அல்லகண்டங் கொண்டடியே னென்செய்கேனே, என்றும்; மானக்கண்ணே மணியேயென்றும் - [அப்பர் தேவாரம்] 'திருவேயென் செல்வமே தேனே வானோர் செழுஞ்சுடரே செழுஞ்சுடர் நற்சோதி |