| | நற்பொனில் திகழ்வென் நயப்பதொன் றன்றால் ஆவதும் ஆகா தொழிவதும் என்றிப் பாவகம் உண்மை பாரா தோர்க்கே | | 60 | பாரா தோர்எனப் பகர்தலிற் பல்லுயிர் ஆராய்ந் துரைக்கின் அவைபிற அல்ல பலபல பேதம் இலஎன் போரும்இல் கண்ணின தொளி அக் கண்ணின தெனில்அது திண்ணிய - இருளிற் செறிபொருள் தெரித்தலும் | பொன்னுக்கும் பணிக்கும் பின்னஞ் சொன்னாற்போல அறிவுக்கும் பிரபஞ் சத்துக்கும் ஒருபக்ஷம் இப்படியுஞ்சொல்லாம்; நற்பொனில் திகழ்வு என் நயப்பதொன் றன்றால் - நல்ல பொன்னினுண்டாகிய மாற்றுப் பணியினிடத்துக் காண்கையாற் பொன்னும் பணியும் ஒரு தானமாயிருக்கப் பொன்னையும் பணியையும் அறிவுக்கும் பிரபஞ்சத்துக்கும் உவமை சொன்னது என்னை, யென்று நீ கேட்கில்; ஆவதும் ஆகா தொழிவதும் என்று இப்பாவகம் உண்மை பாராதோர்க்கே - இந்த உவமை ஆம்பகுதி இந்த உவமை ஆகாப் பகுதி யென்று சொல்லுகிற இந்தப்பாவகம் உண்மையைத் தரிசித்தவர்களுக்கா யிருக்கும், உண்மையைத் தரிசித்தவர்களுக்கு எல்லா உவமையும் தானா யிருக்கும். உண்மைபாராதவர்களென்றும் உண்மைபார்த்தவர்களென்றும் சொன்னது கொண்டே அறிவிலே பின்னமுண்டு என்னீர் என்ன; பாராதோ ரெனப் பகர்தலிற் பல்லுயிர் ஆராய்ந்துரைக்கின் அவைபிறவல்ல-உண்மை தரிசியாதவர்களென்று நான் சொன்னதுகோண்டே நீ ஆன்மாக்களைத் தனியே ஒரு முதலென்று சொல்லிற் பலவாகச் சொல்லப்பட்டு வருகிற ஆன்மாக்களுடைய தன்மையை விசாரித்து நான் சொல்லுமிடத்து அந்த ஆன்மாக்கள் சிவனுக்கு வேறாயிருப்ப தொன்றல்ல, எல்லாஞ் சிவமுதலென்று அறி. இதன்றியும்; பலபல பேதம் இலஎன்போரும் இல் - சிவம் ஒருமுதல், ஆன்மாக்கள் ஒருமுதல், பிரபஞ்சம் ஒரு முதலென்று பலபல பேதங்களாகச் சொல்லுவார்களும் உண்டு, அது சத்தியமன்று, கண் என்று ஒரு முதல் கண்டு வருமாப்போல ஆன்மா என்று ஒரு முதல் தனித்து அறிந்துவரச் செய்தே இதை இல்லையென்பானேன் என்னில்; கண்ணினது ஒளி அக்கண்ணினது எனில் அது திண்ணிய இருளிற் செறிபொருள் |