பக்கம் எண் :

1248சித்தாந்த சாத்திரம் - சங்கற்பநிராகரணம்

1பாச அஞ்ஞானப் பழிவழி ஒழிக
ஈசன தருள்வழி இயம்புவன் கேண்மதி.      16

17. நிமித்தகாரண பரிணாமவாதி சங்கற்பம்

50 புவனம் யாவையும் புனிதன துருவாம்
சிவமுஞ் சத்தியும் எனத்தெளி அவற்றுள்
அசேதனம் என்றொன் றறைதற் கிலதது
சேதனன் நுகர்பொழு திரண்டும்ஓர் திறத்தே
இதுவெனும் ஒன்றை அதுவாய்ப் படுத்துப்
55 பொதுமையில் நிற்கும் போதம்என் றறிக
பொற்பணிப் பேதம் புரைவழி ஒருவழி

பாச அஞ்ஞானப் பழிவழி யொழிக ஈசனது அருள்வழி இயம்புவன் கேள்மதி
- சரீ ரசம்பந்தமும் நீங்காமற் கர்த்தாவையும் அவிகாரவாதஞ் சொன்ன
இந்தக் குற்றத்தை யுடைத்தாகிய முத்திநெறியை விட்டுஞான கர்த்தாவினுடைய
திருவருளின் வழியைச் சொல்லுகிறேன். நீ புத்தி பண்ணிக் கேட்பாயாக
மதியென்றது அசை.                                           16

     மேல் நிமித்தகாரணபரிணாமவாதி தன் மதம் கூறுகின்றான :

     புவனம் யாவையும் புனிதனது உருவாம் சிவமும் சத்தியும் எனத் தெளி
- இந்தப் பிரபஞ்சமாகக் காணப்பட்ட உலகங்கள் இத்தனையுஞ் சிவசொரூபமா
யிருப்பதொன்று, இதில் திருசியமாயுள்ள தெல்லாஞ்சத்தியின்கூறென்றும்
அதிருசியமாயுள்ள தெலாஞ்சிவத்தின் கூறென்றும் நீ தெளிவாயாக; அவற்றுள்
அசேதனமென்று ஒன்று அறைதற்கு இலது-அந்த இரண்டு வகைக்குள்ளும்
அசேதனமாகச் சொல்லப்பட்டதொரு பொருளுமில்லை; அது சேதனன் நுகர்
பொழுது இரண்டும் ஓர் திறத்தே - அதிருசியமாய் அறிவாயிருக்கிற இவன்
அனுபவிக்குமிடத்து அந்த இரண்டு வகையும் ஒரு பகுதியாயிருக்கும்;
இதுவெனும் ஒன்றை அதுவாய்ப் படுத்துப் பொதுமையில்நிற்கும் போதம்
என்று அறிக - இதுவென்று சுட்டப்பட்டதொரு விஷயத்தை அனுபவிக்கு
மிடத்து அதே விஷயந் தானேயாய் அந்த அறிவானது தானென்றும்
விஷயமென்றும் இரண்டாகாமற் பொதுமையிலே நிற்குமென்று அறிவாயாக.
இதன்றியும்; பொற்பணிப்பேதம் புரைவழி யொருவழி - பொன் ஒன்றா
யிருக்கச்செய்தே


     1. பாசஞானப் - பாடபேதம்.