16 . ஈசுவர அவிகாரவாதி நிராகரணம் 40 | சேர்ந்தவர்க் கின்பம் வாய்ந்திடும் என்றனை பாதவம் என்றும் சேதனம் இன்மையின் இளைத்தோர் வம்மின் என்பதும் துன்பம் விளைத்தோர் தம்வயின் வெறுப்பும்ஒன் றிலதே பொடித்திடு கொப்புள் வெடித்திடு பாதம் வெய்ய பூமியின் 1உள்ளுற அழுங்கி | | 45 | ஆற்றுதல் இன்றி யாறியங் குநர்முன் தோற்றிடும் என்று சொல்லவும் இலதால் இவ்வகை கடவுட் கியம்புதல் தவறே | நீரைப்போலவும் நிழலைப்போலவும் பக்ஷப்பிரதிபக்ஷமின்றி யிருக்கிற சிறப்போடுங் கூடியிருந்துள்ள கர்த்தா தன்னைவந்து கூடின பக்குவான் மாக்களுக்குப் பேரின்பம் உண்டாகத்தக்கதாக அனுக்கிரகஞ் செய்யுமென்று நீ சொன்னாய்; பாதவம் என்றும் சேதனமின்மையின் இளைத்தோர் வம்மி னென்பதும் துன்பம் விளைத்தோர் தம்வயின் வெறுப்பும் ஒன்றிலதே - மரமானது ஒருகாற் சடமாயும் ஒருகாற் சித்தாயும் இராமல் எப்பொழுதுஞ் சடமாயிருந்தபடியாலே வெயிலாலுந் தண்ணீர்த் தாகத்தாலும் இளைத்துப் போகிறவர்களை ஐயோ இங்கே வாருங்கோள் என்னுடைய நிழலிலேயிருந்து இளைப்பாறிப் போங்கோளென்று பிரியப்பட்டுச் சொல்லுவதுமில்லை, தன்னை அடியோடே வெட்டிச் சாய்த்துப் போட்டவர்களளவில் ஐயோ இப்படிச் செய்தார்களென்று அகிதப்பட்டதுமில்லை. இதன்றியும்; பொடித்திடு கொப்புள் வெடித்திடு பாதம் வெய்ய பூழியின் உள்ளுற அழுங்கி ஆற்றுதலின்றி ஆறு இயங்குநர் முன் தோற்றிடுமென்று சொல்லவும் இலதால் - உள்ளங்காலிலே கொப்புட்கொண்டு அது உடைந்த வாயிலே சுடுகிற புழுதியிலே பட்டழுந்தி அதனாலே ஆற்ற மாட்டாமல் எங்கே தண்ணீர் காண்போம் எங்கே ஒரு நிழற் காண்போமென்று மத்தியானத்திலே வழியிலே நடந்து வருகிறவர்கள் முன்னே மரமானது சென்று தோன்றி அவர்கள் விதனத்தைத்தீர்த்துவிட்ட தென்கிற சொல்லும் இதற்கு இல்லாதபடியாலே; இவ்வகை கடவுட்கு இயம்புதல் தவறே - நீரும் நிழலும் போலுமென்கிற அவிகாரவாதம் கர்த்தாவுக்கு நீ சொன்னது மிகவும் பழுதாம்.
1. நொய்யென - பாடபேதம். |