பக்கம் எண் :

1246சித்தாந்த சாத்திரம் - சங்கற்பநிராகரணம்

30 ஆதலின் வாயில் அளவினில் அறிதலின்
ஏதமில் அறிவுயிர்க் கெய்துதல் இலதே
இருட்கு விளக்கென்று ஏந்தினர் போல
மருட்கு ஞானம் மன்னுதல் உன்னும்
என்றனை கருவிகள் யாவும் அசேதனம்
35 துன்றிய உயிருந் துரியத் தண்மையன்
ஆதலின் அந்தர் அனைவரும் கூடித்
தீதற அருநெறி தெரியுமென் றற்றே
நீர்நிழல் அனைய சீர்பெறு கடவுளைச்

துண்டித்துப் போட்டாரென்று பெரியோர்கள் சொல்லுவார்கள். ஆதலின்
வாயில் அளவினில் ஏதமில் அறிவு உயிர்க்கு எய்துதல் இலதே -
ஆகையினால் இந்திரியங்களினுடைய எல்லையிலே நின்றறிந்து வருகை
யினாலே குற்றமற்றிருக்கிற அறிவு ஆன்மாவுக்குப் பொருந்துதல் உண்டாகாது.
இது பெத்தத்தை மறுத்தது.

     மேல் முத்தியை மறுக்கிறான்: இருட்கு விளக்கொன்று ஏந்தினர்போல
மருட்கு ஞானம் மன்னுதல் உன்னும் என்றனை-இருளினிடத்திலே ஒரு
பண்டம் எடுக்க வேண்டினவர் கையிலே விளக்கைப் பிடித்துக்கொண்டு
சென்று அந்தப் பண்டமெடுத்தாற் போல இவனுடைய அஞ்ஞான இருள்
நீங்குதற்கு ஞான விளக்கு நிலைப்பெற்று நிற்கத் தக்கதாகக் கர்த்தா
அனுக்கிரகஞ் செய்யுமென்று நீ சொன்னாய்; கருவிகள் யாவும் அசேதனம்
துன்றிய உயிரும் துரியத்து அண்மையன் - கருவிகள் முப்பத்தாறையும்
விசாரித்துப் பார்க்குமிடத்துச் சுத்தச் சடமாயிருப்பதொன்று, அஞ்ஞானத்
தினாலே நெருங்கியிருக்கிற ஆன்மாவின் தன்மையை விசாரித்துப்பார்க்கு
மிடத்துத் துரியத்துக்கு அண்மையன், எனவே துரியாதீதத்திலே நிற்பா
னொருத்தன்; ஆதலின் அந்தர் அனைவரும் கூடித் தீதறவருநெறி தெரியு
மென்றற்றே - ஆகையால் இவை தன்னிற் கூடித்திருவருளைப் பெற்று அது
காட்டாகச் சிவனைப் பெறுமென்கிறது, அனேகங் குருடர் தம்மிற் கூடிக்
குற்றமற்றிருக்கிறதொரு பெருவழியைக்கண்டு அந்த வழியேபோய்
ஓரூரிலேசென்று தலைப்பட்டார்களென்று சொல்லுகிறதற்கொக்கும். இதன்றியும்;
நீர் நிழல் அனைய சீர்பெறு கடவுளைச் சேர்ந்தவர்க்கு இன்பம் வாய்ந்திடு
மென்றனை -